பல கோடிகளை ஆட்டை போட்ட தீபா ... அடுக்கடுக்காக குவியும் புகார்களால் பேஜாரான பேபிமா...

 
Published : Jan 23, 2018, 12:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
பல கோடிகளை ஆட்டை போட்ட தீபா ... அடுக்கடுக்காக குவியும் புகார்களால் பேஜாரான பேபிமா...

சுருக்கம்

J.deepa cheating money from her carders

தன்னுடையை பேரவையில் பதவி தருவதாக கூறி ஜெ.வின் அண்ணன் மகளும் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் போதுசெயலாளருமான  தீபா பலரிடமும் கோடிக்கணக்கில் மோசடி செய்து விட்டதாக புகார்கள் குவிந்து வருகிறது.

எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் செயலாளர் தீபா தன்னுடைய வீட்டில் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாகவும், தீபா பேரவையிலிருந்து நீக்கப்பட்ட ராமச்சந்திரன் என்பவர் மீது கடந்த டிச.27ம் தேதி போலீசாரிடம் ஒரு புகார் ஒன்றை அளித்தார். ஆனால், போலீசார் விசாரிக்கையில் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என்பதும், ராமச்சந்திரனை சிக்க வைக்க தீபாவின் கார் ஓட்டுனர் ராஜா அந்த கல்வீச்சு நாடகமாடியது அரங்கேறியது. அதன் பின்னணியில் தீபா இருந்ததும் தெரிய வந்தது. எனவே, போலீசார் தீபாவையும், ராஜாவையும் கடுமையாக எச்சரித்து அனுப்பினர். 


 
இதனை அடுத்து, இந்த பேரவையில் செயலாளராக அறிவிக்கப்பட்ட தீபாவின் கார் டிரைவர் ராஜா, பலருக்கு பதவி வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக புகார் குவிந்ததால் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் செயலாளராக நியமிக்கப்பட்ட தீபாவின் கார் டிரைவர்  ராஜாவை அந்த பொறுப்பிலிருந்து நீக்கி அதிரடியாக அறிவித்தார் தீபா. 
 
மேலும், சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த முட்டை வியாபாரி ராமச்சந்திரனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தீபா பேரவையில் மாவட்ட நிர்வாகி பொறுப்பு வேண்டும் என்பதற்காக தீபாவின் கார் டிரைவர் ராஜாவிடம் ரூ.1.12 கோடி வரை பணம் கொடுத்ததாகவும், ஆனால், தனக்கு எந்த பதவியும் இதுவரை கொடுக்கவில்லை என கூறியுள்ளார். மேலும், அவரைப்போல பலரும் தீபாவிடம் லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளனர். எனவே, அனைவரும் பணத்தை கேட்டு நச்சரிக்கவே, தன்னையும் சேர்த்து, அனைவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தூக்கிவிட்டதாக முட்டை வியாபாரி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

அதோடு, தனக்கு பதவி வேண்டாம். தான் கொடுத்த திருப்பிக் கொடுங்கள். இல்லையெனில், கமிஷனரிடம் புகார் அளிப்பேன் என தான் கூறியதால், தீபாவின் வீட்டில் தாக்குதல் நடந்தது போல் ஒரு நாடகம் நடத்தினார் என ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
 
இந்த புகாருக்கு முன்பாக தொண்டர்களிடம் தீபா ரூ.20 கோடி வரை பணத்தை பெற்று மோசடி செய்தார் என அவரின் கட்சியில் தென்மண்டலப் பொறுப்பாளராக இருந்த ஜானகிராமன் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதமே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், ராமச்சந்திரன் மற்றும் ஜானகிராமன் ஆகியோரை தனக்கு யாரென்றே தெரியாது என தீபா தற்போது கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
 


ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் தீபாவை மற்றொரு ஜெயலலிதாவாகவே நம்பி வந்து அவரின் கட்சியில் பதவியை பெற பணம் கொடுத்து பின் பதவியும் பெறாமல், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் தூக்கி எறியப்பட்ட பலர் தீபாவின் நடவடிக்கையில் அதிர்ச்சி அடைந்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ராமச்சந்திரன் மற்றும் ஜானகிராமனிடம் மட்டுமல்ல தீபாவை நம்பி வந்து பலர் தங்களது பணத்தை லட்சக்கணக்கில்  பறிகொடுத்துள்ளார்கள். பதவிகளைக் கொடுப்பதாக அவரது கார் டிரைவர்  ராஜா பண மோசடி செய்துள்ளார் என அடுக்கடுக்காக புகார்கள் குவிந்து வருகின்றன.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!