
காவல் துறையினர் நேர்மையாகவும், நடுநிலையுடன் பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சீருடை பணியிளர்களுக்கு பணி ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. சிறைத்துறை, தீயணைப்பு துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு, முதலமைச்சர் எடப்படி பழனிசாமி பணி ஆணைகளை வழங்கினார்.
தமிழக காவல் துறையில் 4 திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன் முறையாக திருநங்கைகள், காவல்துறைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சீருடை பணியில் பல இன்னல்கள், சவால்களை எதிர்கொண்டு நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக தமிழக காவல் துறையினர் பணியாற்றி வருவதாகவும் கூறினார்.
தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற எந்த குற்ற செயல்களும் நடக்காமல் காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மாற்றியது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.