
மத்திய அரசை பார்த்தாலே தமிழக அரசு நடுங்குகிறது எனவும் நடுங்கும் தமிழக அரசால் மத்திய அரசிடம் இருந்து எப்படி நிதி பெற முடியும் எனவும் சுயேட்சை எம்.எல்.ஏ டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் இன்று கூடியது.
சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநரை சபாநாயகர் தனபால் வரவேற்றார். ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் பேரவையில் ஆளுநர் வணக்கம் புத்தாண்டு வாழ்த்துக்கள் என கூறி உரையை தொடங்கினார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளில் எதிர்ப்புக்கு இடையே ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையற்ற முயற்சித்தார். எதிர்க்கட்சிகள் அமைதி காக்கும்படி ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து எந்த எதிர்ப்பும் இன்றி பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அதில், சிறந்த நிர்வாகத்தை அரசு தொடர்ந்து வழங்கும் என்று நம்புகிறேன் என ஆளுநர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் குடிமராமத்து பணிகளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு தெரிவித்தார்.
நிதிப்பற்றாக்குறை இருந்தாலும் 7-வது ஊதியக்குழு பரிந்துரை செயல்படுத்தப்பட்டுள்ளது. சிறந்த ஆட்சி நிர்வாகத்தை அரசு தொடர்ந்து வழங்கும் என்று நம்புகிறேன் ஆளுநர் பன்வாரிலால் கூறினார்.
சட்டப்பேரவை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன், மத்திய அரசை பார்த்தாலே தமிழக அரசு நடுங்குகிறது எனவும் நடுங்கும் தமிழக அரசால் மத்திய அரசிடம் இருந்து எப்படி நிதி பெற முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை சம்பிரதாயம் போல இருந்தது. ஓகி புயலால் காணாமல் மீனவர்களை சரியாக தேடவில்லை என மத்திய, மாநில அரசுகள் மீது அவர் குற்றம்சாட்டியுள்ளார்.