தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர்... ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது..

By Ezhilarasan BabuFirst Published Jun 21, 2021, 8:57 AM IST
Highlights

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதில் உரையாற்றுகிறார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைத்துள்ளது, 

தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதில் உரையாற்றுகிறார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைத்துள்ளது, இந்நிலையில் 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு கடந்த 9ஆம் தேதி அறிவித்தார். 

சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் தொடங்க உள்ளது, இன்று காலை 10 மணிக்கு கவர்னர் உரையுடன் இந்த கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. அவர் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தவுள்ளார், அதைத்தொடர்ந்து ஆளுநரின் ஆங்கில உரையை சபாநாயகர் தமிழில் வாசிக்க உள்ளார். முன்னதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சட்டசபை செயலாளர் சீனிவாசன் மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் மரபுப்படி சட்டசபைக்குள் அழைத்து வர உள்ளனர்.

ஆளுனர் உரைக்கு பின்னர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் இந்த சட்டசபை கூட்டத்தொடர் எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். முன்னதாக சட்டசபைக்கு வரும் அனைத்து எம்எல்ஏக்கள் மற்றும் அலுவலர்கள் ஊழியர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல நோய் தொற்று காலம் என்பதால் சட்டசபையில் சமூக இடைவெளியுடன் இருக்கைகள் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

 

click me!