வரும் 11 ஆம் தேதி கூடுகிறது முதல் சட்டமன்ற கூட்டம்.. அன்று காலை சட்டபேரவை தலைவர், துணைத் தலைவர் தேர்தல்.

By Ezhilarasan BabuFirst Published May 8, 2021, 2:40 PM IST
Highlights

அப்போது சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தேர்தல் சான்றிதழை அல்லது பற்றுறுதி பிரமாணம் எடுத்துக் கொள்ள வரும்போது உறுப்பினர்கள் தவறாமல் கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மே 11 ஆம் தேதி பதினோராம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம்  நடைபெற உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:  தமிழகத்தில் 16வது சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத்தொடர்  2021 ஆம் ஆண்டு மே திங்கள் 11-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கலைவாணர் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்ட அரங்கத்தில் தொடங்க உள்ளது. 

அப்போது இந்திய அரசமைப்பின் கீழ் மாண்புமிகு உறுப்பினர்கள் (எம்எல்ஏக்கள் ஆக தேர்வு செய்யப்பட்டவர்கள்) உறுதி மொழி அல்லது பற்றுறுதி பிரமாணம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி  நடைபெற உள்ளது. அப்போது சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தேர்தல் சான்றிதழை அல்லது பற்றுறுதி பிரமாணம் எடுத்துக் கொள்ள வரும்போது உறுப்பினர்கள் தவறாமல் கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப் பேரவையின் பேரவை தலைவர் மற்றும் பேரவை துணைத் தலைவருக்கான தேர்தல் 2021 ஆம் ஆண்டு மே 12ஆம் நாள் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சுமார் 159 இடங்களை கைப்பற்றி திமுக கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில், நேற்று தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஒன்றன்பின் ஒன்றாக பதவி ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் நாளை உறுதிமொழி அல்லது பற்றுறுதி பிரமாணம் எடுத்துக் கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!