மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க கட்டணமா.? அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த மின்வாரியம்

By Ajmal KhanFirst Published Nov 29, 2022, 10:19 AM IST
Highlights

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியின் போது பொதுமக்களிடம் பணம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 

ஆதார் எண் இணைப்பு

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதையடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு விளக்கங்களை அளித்தார். அதில், ஒரே ஆதாரை வைத்து 10 மின் கட்டண இணைப்பிலும் இணைக்கலாம், 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாய மின் இணைப்புக்கான மானியங்கள் தொடரும், ஒருவர் 5 மின் இணைப்பு வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும், ஆதாரை இணைத்தால் மானியங்கள் ரத்தாகும் என்ற தகவலில் உண்மையில்லை என கூறியிருந்தார்.

இதை செயல்படுத்த வேண்டாம், கைவிடுக..! ஸ்டாலினுக்கு அவசர கடிதம் எழுதிய கே. பாலகிருஷ்ணன்

கட்டுப்பாடுகள் விதித்த மின் வாரியம்

இந்தநிலையில் ஆதார் எண்ணை இணைக்க மின் வாரிய அலுவலகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாமில் பணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்தது.இது தொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜியின் உத்தரவுப்படி அதிகாரிகளுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், சிறப்பு முகாம்களுக்கு வரும் முதியவர்கள் , மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், இணைப்பு பணி நடைபெறும் போது கணினியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக கணினிகள் தயாராக வைத்திருக்க வேண்டும்.  காலை 10.30 மணி முதல் மாலை 5.15 வரை நடைபெறும் முகாம்களுக்காக மின்வாரிய அதிகாரிகள் உணவு இடைவேளை, தேநீர் இடைவேளையின்றி பணியாற்ற வேண்டும்.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது ஏன்..? இலவச மின்சாரம் ரத்து செய்ய திட்டமா.? செந்தில் பாலாஜி விளக்கம்

பணம் வசூலிப்பா- மின்வாரியம் எச்சரிக்கை

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் அவசியம் குறித்த விவரங்கள் பிளக்ஸ் போர்டுகள் மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இணைப்பு பணியை மேற்கொள்வதற்காக நுகர்வோர்களிடம் பணம் பெற்றதாக புகார் வந்தால் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து மண்டல பொறியாளர்களுக்கு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதையும் படியுங்கள்

ஆளுங்கட்சிக்கு எதிரான பேச்சு..! வாட்ஸ் அப் கால் ஒட்டுக்கேட்குறாங்க..? பரபரப்பு புகார் கூறிய சவுக்கு சங்கர்

click me!