ஆளுங்கட்சிக்கு எதிரான பேச்சு..! வாட்ஸ் அப் கால் ஒட்டுக்கேட்குறாங்க..? பரபரப்பு புகார் கூறிய சவுக்கு சங்கர்

By Ajmal KhanFirst Published Nov 29, 2022, 9:12 AM IST
Highlights

அரசை விமர்சிப்பவர்களின் வாட்ஸ் அப் பேச்சு ஒட்டுக்கேட்கப்படுவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கவர் ஜிவால் மீது யுடியூப்பர் சவுக்கு சங்கர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

சவுக்கு சங்கருக்கு நிபந்தனை

திமுக, அதிமுக,பாஜக என அனைத்து அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை விமர்சித்து கருத்து தெரிவிப்பவர் யுடியூப்பர் சவுக்கு சங்கர், நீதித்துறை விமர்சித்ததாக மதுரை நீதிமன்றத்தில் புகார் பதியப்பட்ட நிலையில், 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனையடுத்து கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை விடுவித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழக அரசு சவுக்கு சங்கரை 4 வழக்குகளில் கைது செய்தது. இதன் காரணமாக மீண்டும் சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த சவுக்கு சங்கர் மீண்டும் யுடியூப்களில் தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா..! ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தியது ஆளுநரின் பதவிக்கு அழகல்ல - டிடிவி தினகரன்

தொலைபேசி ஒட்டுக்கேட்பு

எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை அடிப்படையில் விடுவித்த நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு கையெழுத்திட சவுக்கு சங்கர் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், உளவுத்துறை மற்றும் சென்னை மாநகர காவல் துறை கடந்த திமுக ஆட்சி காலத்தில் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதை போல தற்போதும் தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளார். Whatsapp பேச்சுகளை ஒட்டு கெடுக்க முடியாத நிலை உள்ள நிலையில் தமிழக காவல்துறை தனியார் நிறுவனத்துடன் இணைந்து வாட்ஸ் அப் கால் எத்தனை நிமிடங்கள் பேசப்பட்டுள்ளது என்ற தகவலை எடுத்து அந்த நபர்கள் மிரட்டப்படுவதாக சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். ஆளுங்கட்சிக்கு எதிராக யார் என்ன பேசினாலும் யார் அவருக்கு தகவல் சொல்கிறார்கள்,  எப்படி அவருக்கு தகவல் செல்கிறது என்று விசாரணை செய்யப்படுவதாகும் தெரிவித்தார்.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது ஏன்..? இலவச மின்சாரம் ரத்து செய்ய திட்டமா.? செந்தில் பாலாஜி விளக்கம்

நீதிமன்றத்தில் புகார்

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் போதை பொருள் தடுப்பு பிரிவில் இருக்கும்பொழுது ஒட்டு  கேப்பு வேலையை செய்ததாகவும் குற்றம்சாட்டினார். உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிராக காவல்துறை செயல்படுவதாகவும் கூறினார். தனி மனித சுதந்திரத்திற்கு எதிராக செயல்படும் நடவடிக்கை தொடர்பாக ஆதரங்கள் திரட்டி வருவதாகவும் இது தொடர்பாக விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக கூறினார். 

இதையும் படியுங்கள்

இதை செயல்படுத்த வேண்டாம், கைவிடுக..! ஸ்டாலினுக்கு அவசர கடிதம் எழுதிய கே. பாலகிருஷ்ணன்

click me!