கடிதத்தை வாங்காமல் அடம்பிடிக்கும் இபிஎஸ்..! அதிமுக மோதல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு மெயில் அனுப்பிய சாகு

By Ajmal Khan  |  First Published Jan 3, 2023, 2:33 PM IST

ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக அனுப்பிய கடித்தத்தை அஇஅதிமுக வாங்க மறுப்பதை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம்  தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.


அதிமுகவிற்கு தேர்தல் ஆணையம் கடிதம்

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துவது தொடர்பான கருத்துகளைத் தெரிவிக்குமாறு, நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக, வருகிற 16-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறும், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவை திமுக, அதிமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

Tap to resize

Latest Videos

குடியரசு தின அலங்கார ஊர்தி..! தமிழகத்திற்கு இந்தாண்டாவது அனுமதியா.? இறுதி பட்டியல் வெளியிட்ட மத்திய அரசு

வாங்க மறுத்த இபிஎஸ்

இந்தநிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் ஆணையம் சார்பாக அனுப்பப்பட்ட கடிதத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த இபிஎஸ் தலைமையிலான அதிமுக தலைமை கடிதத்தை வாங்காமல் இரண்டு முறை திருப்பி அனுப்பியது. இந்திய தேர்தல் ஆணையத்தில் உள்ள தகவலின் அடிப்படையில் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு கடிதம் அளித்ததாக தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்து இருந்தார்.

தேர்தல் ஆணையத்திற்கு மெயில்

இந்தநிலையில் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகம் பெற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பியது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

சூப்பர் ஸ்டார் பட்டம் நிரந்தரம் இல்லை..! உச்சத்தில் நடிகர் விஜய்.!! ரஜினி ரசிகர்களை சீண்டிய சீமான்.!

click me!