நீட் தேர்வு வழக்கு..! விசாரணையை ஒத்திவைக்க கோரிய தமிழக அரசு.! எச்சரிக்கை விடுத்த உச்ச நீதிமன்றம்

By Ajmal KhanFirst Published Jan 3, 2023, 1:40 PM IST
Highlights

குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட "தமிழக நீட் மசோதா" நெடுநாட்கள் நிலுவையில் உள்ளதன் மூலம், நீட் சட்டத்தின் அடிப்படை தன்மை குறித்து கேள்வி எழுப்ப கூடாது என்பது உங்களுக்கு புரியவில்லையா?" என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 

நீட் தேர்வு விலக்கு மசோதா

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் போராடி வருகின்றனர். நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொல்லும் நிகழ்வும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதனையடுத்து மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. பின்னர் மனுவில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவாக தாக்கல் செய்யப்பட்டது. குறிப்பாக நீட் தேர்வு வேண்டாம் என்றே, கடந்த 2010-ம் ஆண்டு வெளியிடப்பட்ட நீட் அறிவிக்கைக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நீட் தேர்வு கட்டாயம் என்று கடந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டு கொண்டு வந்த சட்ட திருத்தத்தை ரத்து செய்ய மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அஜய் ரஸ்தோஹி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த  போது, மருத்துவ படிப்புக்கு சேர நீட் தேர்வு கட்டாயமாக்கி சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளதால், கிராம புற மாணவர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். எனவே தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய  நீட்தேர்வு ரத்து சட்ட மசோதா குடியரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்ததை தொடர்ந்து வழக்கு 12 வாரம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,  தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா இன்னும் ஒப்புதல் பெறாமல் நிலுவையில் உள்ளதால் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசுன் கூடுதல் தலைமை வழக்கறிஞர் "அமித் ஆனந்த் திவாரி" கோரிக்கை வைத்தார். 

ஆனால், அதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி அஜய் ரஸ்தோகி,  இந்த விவகாரத்தில் வாதிட தமிழ்நாடு அரசு தயாராக வரவில்லையா? ஒவ்வொரு முறையும் ஏன் வழக்கை ஒத்திவைக்க கோருகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். மேலும், தமிழக அரசின் "நீட் விலக்கு மசோதா" குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு நெடுநாள் கிடப்பில் உள்ளது என்பதன் மூலம் நீட் சட்டத்துக்கு எதிராக கேள்வி எழுப்பக்கூடாது என்பதையே காட்டுகிறது என தெரிவித்ததோடு, 

குடியரசுத் தலைவர் தரப்பில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளதன் மூலம், நீட் சட்டத்தின் அடிப்படையை தன்மை குறித்து கேள்வி எழுப்ப கூடாது என்பது உங்களுக்கு புரியவில்லையா?" என  வினவினார். இதனையடுதது, ஆளுநர், குடியரசுத் தலைவரை காட்டி வழக்கில் மீண்டும் அவகாசம் கோரினால், உச்சநீதிமன்றம் இதில் தலையிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்ய நேரிடும் என தமிழ்நாடு அரசை எச்சரித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை அடுத்த மாதத்துக்கு  ஒத்திவைத்தனர்.

இதையும் படியுங்கள்

குடியரசு தின அலங்கார ஊர்தி..! தமிழகத்திற்கு இந்தாண்டாவது அனுமதியா.? இறுதி பட்டியல் வெளியிட்ட மத்திய அரசு

click me!