உதயநிதி ஸ்டாலின் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்குகள்.. உச்சநீதிமன்றம் அதிரடி..!

By vinoth kumarFirst Published Jan 3, 2023, 1:37 PM IST
Highlights

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு 69, 355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட இரு தேர்தல் வழக்குகளையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு  69, 355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை முடிவில் குற்றச்சாட்டுக்களுக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, உதயநிதியின் மனுவை ஏற்று, அவருக்கு எதிரான தேர்தல் வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையும் படிங்க;- உதயநிதிக்கு விளையாட்டுத்துறை ஒதுக்கியது பாராட்டுக்குறியது..! சிறப்பாக செயல்படுவார்- செல்லூர் ராஜூ நம்பிக்கை

இந்நிலையில், உதயநிதி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி தேர்தலில் தோல்வியடைந்த ரவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், தேர்தல் வேட்பு மனுவில் தவறான மற்றும் பொய்யான தகவல்களை உதயநிதி தெரிவித்துள்ளார், குறிப்பாக தனது வேட்பு மனுவோடு இணைத்து வழங்கும் படிவம்-26ல் தன் மீது எந்த கிரிமினல் வழக்கும் இல்லை என கூறியுள்ளார், ஆனால் அந்த தகவல் என்பது பொய்யானது. ஏனெனில் உதயநிதி மீது 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன, எனவே அவர் வேட்பு மனுவில் பொய்யான தகவல்களை குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். 

எனவே உதயநிதி வேட்புமனுவை ஏற்றது என்பது மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் கீழ் தவறானது. ஆகையால், அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட வேண்டிய முகாந்திரம் இல்லை என கூறிய நீதிபதிகள், அமைச்சர்  உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க;-  வக்கிர புத்தி.. எந்த காலத்திலும் திமுக காரனுங்க திருந்தவே மாட்டானுங்க.. பெண் போலீசுக்கே பாலியல் தொல்லை! டிடிவி

click me!