அதிமுக அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் என குறிப்பிட்டு கடிதம் அனுப்பியது ஏன்- தேர்தல் ஆணையம் விளக்கம்

By Ajmal KhanFirst Published Jan 1, 2023, 1:23 PM IST
Highlights

டெல்லியில் இருந்து இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்களின் படியே அதிமுக ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் பெயர் போட்டு ராயப்பேட்டை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியதாக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். 
 

அதிமுக அதிகார மோதல்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்-இபிஎஸ் என பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து அதிமுக யாருக்கு சொந்தம் என இரு தரப்பும் போட்டி போட்டு வருகின்றனர். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் தான் தான் என இபிஎஸ்ம், ஒருங்கிணைப்பாளர் நான் தான் என ஓபிஎஸ்ம் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வடிவமைத்த ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து விளக்கம் அளிக்க அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது.

தேர்தல் ஆணையம் கடிதம்

ஏற்கனவே பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் அணி தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்தார். இதனையடுத்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு கடிதம் அனுப்பியது. இந்த கடிதம் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது. அப்போது தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட பதவிகளில் யாரும் இல்லை என கூறி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தை அதிமுக தலைமை அலுவலக நிர்வாகிகள் பெற்றுக்கொள்ள மறுத்து திருப்பி அனுப்பினர்.

உலகத்தை அச்சுறுத்தும் போதை மருந்து கும்பல் தலைவன்..! தமிழகத்திற்குள் ஊடுருவியது எப்படி.?-அன்புமணி ஆவேசம்

விளக்கம் அளித்த தேர்தல் அதிகாரி

இந்தநிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு டெல்லியில் இருந்து இந்திய தேர்தல் ஆணையம் கொடுத்த ஆவணங்களின் படியே அதிமுக ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் பெயர் போட்டு ராயப்பேட்டை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியதாக தெரிவித்துள்ளார். எனவே தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்தில் இபிஎஸ் தரப்பு பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படியுங்கள்

அதிமுகவின் எதிர்காலம் பிரகாசம்..! விரைவில் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் - செல்லூர் ராஜூ நம்பிக்கை

click me!