உலகத்தை அச்சுறுத்தும் போதை மருந்து கும்பல் தலைவன்..! தமிழகத்திற்குள் ஊடுருவியது எப்படி.?-அன்புமணி ஆவேசம்

Published : Jan 01, 2023, 12:19 PM IST
உலகத்தை அச்சுறுத்தும் போதை மருந்து கும்பல் தலைவன்..! தமிழகத்திற்குள் ஊடுருவியது எப்படி.?-அன்புமணி ஆவேசம்

சுருக்கம்

போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் முகமது இம்ரான் தமிழ்நாட்டில் ஊடுருவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், உடனடியாக அவனை கைது செய்ய வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் போதை பொருள் கும்பல் தலைவன்

போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் தமிழகத்தில் ஊடுருவி இருப்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ள நிலையில் இது தொடர்மாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உலகின் மிகக்கொடிய போதைமருந்து கடத்தல் கும்பல் தலைவனான முகமது நாஜிம் முகமது இம்ரான்  தமது கூட்டாளிகளுடன் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஊடுருவியிருப்பதாக  வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன.  எல்லையோர பாதுகாப்பு குறைபாடுகளையே இது காட்டுகிறது. முகமது இம்ரான் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தப்பி வரக்கூடும் என்று தமிழக உளவுத்துறைக்கு மத்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

புத்தாண்டு கொண்டாட்டம்..! மது போதையில் அதி வேகமாக வாகனம் ஓட்டிய இளைஞர்கள்- அதிரடியாக நடவடிக்கை எடுத்த போலீஸ்

இலங்கையில் இருந்து தப்பினான்

அதற்குப் பிறகும் கடலோரக் காவல்படை, தமிழகக் காவல்துறையின் பாதுகாப்பை மீறி முகமது இம்ரான் தமிழகத்தில் நுழைந்தது எப்படி?பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஹெராயின், கோகெய்ன் கடத்தல் கும்பல்களுடன் முகமது இம்ரானுக்கு வலிமையான பிணைப்பு உண்டு. 2019-ஆம் ஆண்டில் துபையில் கைது செய்யப்பட்டு  இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இம்ரான்,  அங்கு பிணையில் விடுதலையான நிலையில் தப்பியுள்ளான்!

நாடு கடத்த வேண்டும்

தமிழ்நாட்டில் போதைமருந்து கலாச்சாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.  போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் முகமது இம்ரானின்  ஊடுருவல் நிலைமையை மேலும் மோசமாக்கக் கூடும்.  முகமது இம்ரானை உடனடியாக கைது செய்து நாடு கடத்த வேண்டும் என அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

அதிமுகவின் எதிர்காலம் பிரகாசம்..! விரைவில் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் - செல்லூர் ராஜூ நம்பிக்கை

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!