எடப்பாடி பழனிச்சாமி- சசிகலா சந்திப்பு ஜென்மத்திற்கும் நடைபெறாது. அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்.

Published : Feb 10, 2021, 01:35 PM ISTUpdated : Feb 10, 2021, 02:03 PM IST
எடப்பாடி பழனிச்சாமி- சசிகலா சந்திப்பு ஜென்மத்திற்கும் நடைபெறாது. அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்.

சுருக்கம்

உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி அதிமுகவினரிடையே உரையாற்றியது தவறாக திரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி சசிகலா சந்திப்பு ஜென்மத்திற்கும் நடைபெறாது. 

எடப்பாடி பழனிச்சாமி- சசிகலா சந்திப்பு ஜென்மத்திற்கும் நடைபெறாது என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

சென்னை கோட்டூர்புரத்தில் அம்மா மினி கிளினிக் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு கூறினார். மேலும் பேசிய அவர், அம்மா மினி கிளினிக் தமிழக முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களி மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. எழை எளிய மக்கள் இந்த மினி கிளினிக் மூலம் பயனடைந்து வருகின்றனர். 

தேமுதிக, பாமக, தமாக உள்ளிட்ட கட்சிகள் அதிமுக கூட்டணியில் உள்ளது. பாராளுமன்ற தேர்தல் இருந்த அதே  கூட்டணி தொடரும். நட்பு ரீதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, சசிகலாவை சந்திப்பதில் தவறில்லை என தெரிவித்த அவர் கொள்கை வேறு கூட்டணிவேறு என கூறினார் . 

பணத்தை காட்டி கூட்டம் கூட்டுவதில் அவர்கள் சிறந்த கட்டமைப்பை கொண்டுள்ளனர் என்றும் அது காலத்திற்கும் நிற்காது என்றும் விமர்சித்தார். உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி அதிமுகவினரிடையே உரையாற்றியது தவறாக திரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி சசிகலா சந்திப்பு ஜென்மத்திற்கும் நடைபெறாது. சசிகலா ஒன்றினைவோம் வா என அழைத்தது திமுகவைதான் என்றும், சசிகலா மற்றும் திமுகவிற்கு பொது எதிரி அதிமுகதான் என அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.
 

PREV
click me!

Recommended Stories

Durga Puja: துர்கா பூஜை பந்தல்களில் அசைவ உணவா? VHP என்ன சொல்கிறது!
Free Training: விவசாயிகள், இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! தமிழ்நாடு அரசு தரும் இலவச பயிற்சி.! இனி லாபம் கொட்டப்போவது உறுதி.!