சீதா நாட்டில், ராவணன் நாட்டில் குறையும் பெட்ரோல்- டீசால், ஏன் ராமன் நாட்டில் மட்டும் உயருகிறது.. சமாஜ்வாடி MP.

By Ezhilarasan BabuFirst Published Feb 10, 2021, 1:12 PM IST
Highlights

சீதா மாதாவின் நிலமாகக் கருதப்படும் நேபாளத்தில் பெட்ரோல் டீசல் விலை இந்தியாவில் விட குறைவாக உள்ளது.  அதேபோல் ராவணனின் நாடு என கூறப்படும் இலங்கையிலும் இந்தியாவை விட விலை குறைவாக உள்ளது.  ஆனால் ராமனின் நாட்டில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை விலை உச்சத்தில் இருக்கிறதே.?  

நாட்டில் எல்லா நேரத்திலும் பெட்ரோல் விலை உயர்கிறது என்று கூறுவது சரியல்ல, அதேபோல் மற்ற அண்டை நாடுகளுடன் இந்தியாவின் பெட்ரோல் டீசல் விலையை ஒப்பிடுவது தவறு என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் பல்வேறு உறுப்பினர்கள் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில் பெட்ரோல் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பெட்ரோல் விலை கடந்த ஜனவரி 27-ஆம் தேதிக்கு பின் பிப்ரவரி 2ஆம் தேதி வரை மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது. ஆனால் அதன் பிறகு தொடர்ந்து பெட்ரோல்- டீசல் விலை  உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 89. 96 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 82.90 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இப்படி அன்றாடம் பெட்ரோல் விலையில் தொடர்ந்து ஏறு முகத்தில் இருந்து வருவது பொதுமக்களை  கவலையடையச் செய்துள்ளது. 

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை பெட்ரோல்-டீசல் விலை உயர்வை பொறுத்தே அமைகிறது என்பதால் இது அதிமுக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்நிலையில், மாநிலங்களவையில் சமாஜ்வாடி கட்சி எம்பி விஷம்பர் பிரசாத் நிஷாத், பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் குறித்து கேள்வி எழுப்பினார். அவர் எழுப்பிய கேள்வி சுவாரஸ்யமாக இருந்தது, அதாவது சீதா மாதாவின் நிலமாகக் கருதப்படும் நேபாளத்தில் பெட்ரோல் டீசல் விலை இந்தியாவில் விட குறைவாக உள்ளது.  அதேபோல் ராவணனின் நாடு என கூறப்படும் இலங்கையிலும் இந்தியாவை விட விலை குறைவாக உள்ளது.  ஆனால் ராமனின் நாட்டில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை விலை உச்சத்தில் இருக்கிறதே.?  அதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.

மேலும் காங்கிரஸ் எம்பி கே.சி வேணுகோபால் எழுப்பிய கேள்வியில், நாட்டில் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதாவது கச்சா எண்ணெய் விலை குறையும் போதும் கூட பெட்ரோல்-டீசல் விலை குறைவது இல்லையே, இப்போது பெட்ரோல் ரூபாய் 100 ரூபாயை நெருங்கி உள்ளது. மொத்தத்தில் எக்சைஸ் வரி எத்தனை மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்? 

இந்த இரு கேள்விகளுக்கும் பதில் அளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், எரிபொருள் எல்லா நேரங்களிலும் உயர்ந்திருக்கிறது என்று சொல்வது சரியல்ல. அதேபோல் அண்டை நாடுகளுடன் இதை ஒப்பிடுவதும் தவறு. ஏனெனில் பல நாடுகளில் இந்தியாவை காட்டிலும் குறைந்த அளவிலேயே அதன் பயன்படு உள்ளது. அதேபோல் நமது நாட்டுக்கும் அந்த நாடுகளுக்கும் மண்ணெண்ணெய் விலையில் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தில் 1 லிட்டர் மண்ணெண்ணெய் 57 முதல் 59 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் 1 லிட்டர் மண்ணெண்ணெய் 32 ரூபாய்க்கு கிடைக்கிறது என் அவர் பதில் அளித்தார். 
 

click me!