சசிகலா சதிகாரி... தினகரனை நம்பினால் நடுரோட்டில் நிற்கணும்.. எரிமலையாய் வெடித்த முதல்வர்..!

Published : Feb 10, 2021, 12:47 PM IST
சசிகலா சதிகாரி... தினகரனை நம்பினால் நடுரோட்டில் நிற்கணும்.. எரிமலையாய் வெடித்த முதல்வர்..!

சுருக்கம்

திமுக ஆட்சிக்கு வருவதற்கு சிலர் உதவி செய்து வருவதாக மறைமுகமாக சசிகலாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார். 

திமுக ஆட்சிக்கு வருவதற்கு சிலர் உதவி செய்து வருவதாக மறைமுகமாக சசிகலாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார். 

வேலூரில் அதிமுகவின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்;- திமுக ஆட்சிக்கு வருவதற்கு சிலர் மறைமுகமாக உதவி வருகின்றனர். அதை அதிமுக முறியடிக்கும். அதிமுகவை கைப்பற்றி திமுகவிற்கு மறைமுகமாக உதவ முயற்சிப்பவர்களின் முயற்சி சுக்குநூறாக முறியடிக்கப்படும். சதிவலையை தூள் தூளாக உடைத்து ஜெயலலிதாவின் ஆட்சி தொடர பாடுபடுவோம், 10 ஆண்டுகள் உறுப்பினராக இல்லாத டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்ற முயற்சித்து வருகிறார். 

டிடிவி தினகரனை நம்பி சென்றால் நடுரோட்டில்தான் நிற்க வேண்டும். அதிமுகவை கைப்பற்ற நினைப்பவர்களை நம்பி சென்ற 18 எம்எல்ஏக்கள் பதவி இழந்து நடுரோட்டில் நிற்கின்றனர். திமுக ஆட்சிக்கு வரக் கூடாது என்று எம்ஜிஆர் தன் இறுதி மூச்சு வரை போராடினார். அதே வழியில் ஜெயலலிதாவும் நின்றார். சில சதிகாரிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு சதி வலையை இன்றைக்குப் பின்னிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வலையை சின்னாபின்னமாக தூள் தூளாக தகர்த்தெறிந்து, அம்மா அரசு தொடர நாம் பாடுபடுவோம். அதிமுகவை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது. ஏனென்றால், அந்த இரு பெரும் தலைவர்கள் தனக்காக வாழவில்லை. நாட்டு மக்களுக்காக வாழ்ந்தவர்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..