எடப்பாடிக்கு குடைச்சல் கொடுக்கும் தேமுதிக... விஜயகாந்துடன் நேரில் சென்று சசிகலாவை சந்திக்கும் பிரேமலதா..!

By Thiraviaraj RMFirst Published Feb 10, 2021, 12:25 PM IST
Highlights

சசிகலா சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் வசிக்கும் நிலையில், அவரை பிரேமலதா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.

சசிகலா சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் வசிக்கும் நிலையில், அவரை பிரேமலதா சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது வரை அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக இருக்கிறது. பிரேமலதா தங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும் என அதிமுகவை வெகு நாட்களாக கேட்டு வருகிறது. ஆனால் அதிமுக தலைமை தேமுதிகவின் வேண்டுகோளை கண்டுகொள்ளவில்லை.

 

இந்நிலையில், தேமுதிக 234 தொகுதிகளிலும் தனித்து நிற்கும் என்று மிரட்டினார் பிரேமலதா. எடப்பாடியார் இதுகுறித்து அலட்டிக் கொள்ளவில்லை. இதனால் ஆத்திரத்தில் இருந்து பிரேமலதா சசிகலா வருகை குறித்து ஆதரவாக பேசினார். இந்நிலையில் எடப்பாடியாருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில்  சசிகலாவை தனது கணவர் விஜயகாந்துடன் சென்று நலம் விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்து சசிகலாவுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வரும் கருணாஸ் எம்.எல்.ஏ.,வும் சசிகலாவை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத் குமாரும் வெகு விரைவில் சசிகலாவை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

ஒருவேளை அதிமுக ஒன்றாக இணையாத பட்சத்தில் அமமுக, தேமுதிக, கருணாஸ் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

 

சசிகலாவிற்கு ஆதரவாக பிரேமலதா பேசி வருகிறார். இதற்குக் காரணம் கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின் போது அதிமுக தேமுதிக இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகளை சுமூக பேசி முடித்தவர் சசிகலாதானாம். 41 இடங்களை பெற்றுக்கொடுத்ததும் அவர்தானாம் அதற்கு நன்றிக்கடனாவே சசிகலா இப்போது ஆதரவாக பேசி வருகிறாராம்.


 

click me!