போக்குவரத்தை தனியார் மயமாக்கிட்டா அடங்கிடுவாங்க! சொல்றது எஸ்.வி.சேகர்!

Asianet News Tamil  
Published : Jan 05, 2018, 01:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
போக்குவரத்தை தனியார் மயமாக்கிட்டா அடங்கிடுவாங்க! சொல்றது எஸ்.வி.சேகர்!

சுருக்கம்

The drivers and conductors should be laid off

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக, பயணிகளை ஈவிரமிக்கி இறக்கிவிட்ட ஓட்டுநர்களையும், நடத்துநர்களையும் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று பாஜகவின் எஸ்.வி.சேகர், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக  ஊழியர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நேற்று மீண்டும் குரோம்பேட்டையில்  நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இப்போது முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கிவிட்டதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் நடத்தி வரும் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் இன்று குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்து சேவை இல்லாத காரணத்தால், மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களை நாடி செல்கின்றனர். ஆனாலும், ஆட்டோக்கள் மற்றும் தனியார் வாகனங்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளன. திருவள்ளூரில் 25 அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு
வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 பணிமனைகளில் 40 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. திருத்தணியில் 10 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.

வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்த உடனேயே, பேருந்து ஓட்டுநர்களும், நடத்துனர்களும், பயணிகளை நடுவடிழயிலேயே இறக்கி விட்டுள்ளனர். இதனால் பயணிகளுக்கும், ஓட்டுநர்-நடத்துநர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து பயணிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள நிலையில், ஓட்டுநர்-நடத்துனரின் செயலுக்கு பலத்த எதிர்ப்பு வந்துள்ளது. மாலை இருட்டும் வேளை என்று கூட பார்க்காமல், பள்ளி
மாணவ-மாணவிகள், பெண்கள், முதியோர்கள் என அனைவரும் பாதியிலேயே வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்டனர்.

இந்த நிலையில், பாஜகவின் எஸ்.வி.சேகர், இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பயணிகளை இரக்கமின்றி நடுவழியில் இறக்கிவிட்ட ஓட்டுநர்களையும், நடத்துனர்களையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

எஸ்.வி.சேகரின் டுவிட்டர் பதிவில், தனியார் மயமாக்கப்பட்டுவதில் முதலிடத்துக்கு அரசு போக்குவரத்து கழகங்கள் தள்ளப்பட வேண்டும். நேற்று பாதி வழியில் பயணிகளை ஈவிரக்கமின்றி இறக்கிவிட்ட ஓட்டுநர்களும், நடத்துநர்களும் வேலை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

5.5 லட்சம் கோடி கடன்.. தமிழக மக்களை கடனாளியாக்கிய முதல்வர் ஸ்டாலின்.. இபிஎஸ் விமர்சனம்!
‘4-ல் 1கூட இல்லை.. ஸ்டாலின் சொல்லும் அத்தனையும் பச்சைப் பொய்..! எடப்பாடி பழனிசாமி சீற்றம்..!