தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் என் வீட்டின் கதவு திறந்தே இருக்கும்... நிதி அமைச்சர் பிடிஆர்.

Published : Oct 17, 2022, 06:36 PM IST
தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் என் வீட்டின் கதவு திறந்தே இருக்கும்... நிதி அமைச்சர் பிடிஆர்.

சுருக்கம்

புரட்சித் தலைவர் என்றால் அது நம் தலைவர் தான் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அடிப்படைத் தொண்டனுக்கு நிதியமைச்சர் பொறுப்பு கொடுத்து ஊக்கமும் உற்சாகமும் கொடுத்தவர் நமது முதல்வர் தான் என்றும் திமுக தலைவர் ஸ்டாலினை புகழ்ந்துள்ளார்.  

புரட்சித் தலைவர் என்றால் அது நம் தலைவர் தான் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அடிப்படைத் தொண்டனுக்கு நிதியமைச்சர் பொறுப்பு கொடுத்து ஊக்கமும் உற்சாகமும் கொடுத்தவர் நமது முதல்வர் தான் என்றும் திமுக தலைவர் ஸ்டாலினை புகழ்ந்துள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகிறது. பொதுக்குழுவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் திமுக அமைச்சர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ளவேண்டும் என எச்சரித்தார்.அது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அதைத்தொடர்ந்து மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் " சிலர் கட்சி நிகழ்வுகளை தானும் புறக்கணித்து மற்றவர்களையும் அழைத்து புறக்கணிக்க சொல்லுவதாக தகவல்கள் வருகிறது"  இதுபோன்ற  தகவல்கள் எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை எனக்காக நான் யாரையும் எதையும் செய்ய சொல்லி கேட்டதில்லை.

இதையும் படியுங்கள் :யமகா நிறுவன பிரச்சனையில், முதலாளிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு.? மண்ணில் மக்களுக்கு துரோகம்.. கொதிக்கும் சீமான்.

யாரையும் நான் கட்டுப்படுத்த மாட்டேன் அவரைப் போய் பார்க்காதே இவரைப் போய் பார்க்காதே எனக்கு போஸ்டர் ஒட்டு என்று நான் யாருக்கும் சொல்ல மாட்டேன் சொன்னதும் இல்லை, இனி சொல்லவும் மாட்டேன், நான் பெரிய மனிதன், அப்படியெல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது என  ஆதங்கத்துடன் பேசியிருந்தார்.  இது திமுகவில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  திமுகவில் உட்கட்சி பூசல் வெடிக் ஆரம்பித்துவிட்டது அதன் வெளிப்பாடுதான் பிடிஆர் பேச்சு என பலரும் அதை விமர்சித்து வந்தனர். இந்நிலையில் சர்ச்சைகளுக்கு மத்தியில் தேவர் ஜெயந்திக்கு மதுரைக்கு வருகை தரும் முதலமைச்சர்  ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : குஜராத்தில் PMJAY-MA யோஜனா ஆயுஷ்மான் அட்டைகள் விநியோகம்... தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் அண்ணா நகர் பகுதியில் திமுக செயற்குழுக் கூட்டம், மாவட்ட செயலாளர்கள் தளபதி, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பிடிஆர், எல்லோரும் விவாதித்து முடிவு எடுத்தாலும் தலைவரின் முடிவுக்கு கட்டுப்படுவது சிறப்பான குணம். நம்மைப் பொறுத்தவரையில்  இரண்டே இரண்டு இலக்குகள் தான்,  இயக்கக் கொள்கைகளை முழுமையாக பராமரித்து சமூகத்தை முன்னேற்ற வேண்டும், அமைப்பையும் தலைவர் பெயரையும் புகழையும் நிலை நிறுத்துவது தான் நம் முதன்மை இலக்கு.

தலைவர்களிலேயே புரட்சித்தலைவர் என்றால் அது நம் தலைவர் தான். அடிப்படைத் தொண்டனுக்கு நிதியமைச்சர் பொறுப்பு கொடுத்து ஊக்கமும் உற்சாகமும் கொடுத்துள்ளார். அடிப்படை தொண்டனுக்கு பதவி கொடுத்து ஊக்கப்படுத்தும் ஒரே தலைவர் நம் தலைவர்தான். கழகத் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் என் வீட்டின்  கதவு எப்போதும் திறந்து இருக்கும்.  எப்போது வேண்டுமானாலும் நீங்கள் வரலாம், விருந்தினராக வரலாம் இவ்வாறு அவர் பேசியுள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி