தாமதப்படுத்தாமல் உடனே வழங்குக.. தலைமைச்செயலாளரிடம் இருந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு.!

By vinoth kumarFirst Published Jun 20, 2021, 10:30 AM IST
Highlights

மாவட்ட ஆட்சியர்கள் இதில் நேரடியாக தலையிட்டு, சரியான விவரங்களை பதிவுசெய்யுமாறு மருத்துவமனை அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ்கள் போன்றவை தாமதமின்றி கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்களுக்கு உடனடியாக இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ்களை விரைவில் கிடைப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச்செயலாளர் அனுப்பிய கடிதத்தில்;- கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து திரும்பினாலோ, உயிரிழந்தாலோ அவர்களது பெயர், முகவரி, வயது உள்ளிட்ட விவரங்களை மருத்துவமனைகள் சரியாக பதிவேற்றம் செய்வதில்லை என்றும், இதனால், இறப்பு தொடர்பான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும் நோயாளிகளின் உறவினர்கள் அரசுக்கு புகார் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற விவரங்களை சரியாக பதிவு செய்வது குறித்து ஏற்கெனவே பலமுறை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே, மாவட்ட ஆட்சியர்கள் இதில் நேரடியாக தலையிட்டு, சரியான விவரங்களை பதிவுசெய்யுமாறு மருத்துவமனை அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ்கள் போன்றவை தாமதமின்றி கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

click me!