#BREAKING போலீசாருக்கு பயந்து தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அதிரடி கைது..!

Published : Jun 20, 2021, 09:22 AM ISTUpdated : Jun 22, 2021, 12:58 PM IST
#BREAKING போலீசாருக்கு பயந்து தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அதிரடி கைது..!

சுருக்கம்

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி கருக்கலைப்பு செய்ததாக நடிகை சாந்தினி புகாரை அடுத்து தலைமறைவாக இருந்து வந்த முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி கருக்கலைப்பு செய்ததாக நடிகை சாந்தினி புகாரை அடுத்து தலைமறைவாக இருந்து வந்த  முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

திருமணம் செய்து கொள்வதாகக் கூறித் தன்னை ஏமாற்றியதாகவும், புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என, நடிகை சாந்தினி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் போது மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் எனவும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மணிகண்டனின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்பதால் தலைமறைவானார். 

இந்நிலையில், அதிமுக முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டனை பிடிப்பதற்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு மதுரை சென்று அவரை தேடினர். மற்றொரு தனிப்படையினர் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று காலை பெங்களூருவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!