
இராமேஸ்வரம் TO காசி
தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாடு சட்ட மன்ற அறிவிப்பு எண்.27-ன் படி "இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயிலில் இருந்து காசி அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோயிலுக்கு இவ்வாண்டில் 200 நபர்கள் ஆன்மிகப் பயணம் அழைத்துச்செல்லப்படுவர் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை செயல்படுத்தும் விதமாக 200 நபர்களை ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்வதற்கு ஏதுவாக தகுதியான நபர்களை 20 இணை ஆணையர் மண்டலங்களிலிருந்து தலா 10 நபர்களை தேர்வு செய்வதற்கு ஏதுவாக அறிவிப்பு வெளியிடும் படி கேட்டுக்கொள்ளப்பட்டதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணியில் கூட விடுதலை சிறுத்தை வேண்டாம் என சொல்லவே 99 சதவீதம் பேர் உள்ளனர்..! திருமாவளவன் ஆதங்கம்
அறநிலையத்துறை புதிய திட்டம்
மேலும் காசி ஆன்மிகப் பயணம் செல்ல விண்ணப்பிப்பதற்கான நிபந்தனைகளையும் அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. அதில், காசி ஆன்மிகப் பயணம் செல்ல விண்ணப்பிப்பவர்கள் இந்து மதத்தைச்சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வயது சான்று இணைக்கப்படவேண்டும். விண்ணப்பதாரர்களின் ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல்இருக்க வேண்டும். வட்டாட்சியரிடமிருந்து வருமானச்சான்று பெற்று இணைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காசி ஆன்மிகப் பயணம் (10 நாட்கள்) சென்று வரும் அளவிற்கு விண்ணப்பதாரர்களுக்கு போதிய உடல் தகுதி உள்ளதற்கான அரசு மருத்துவர்களின் (Civil Surgeon) சான்று கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தாவல் திலகம் குஷ்புவுக்கு நாவடக்கம் தேவை..! கடுமையாக விமர்சித்த முரசொலி
இந்துக்கள் மட்டும் அனுமதி
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தங்களுடன் சிறு குழந்தைகளை அழைத்துர் வர அனுமதி இல்லை.இந்து சமய அறநிலையத்துறையின் ஒவ்வொரு இணை ஆணையர் மண்டலத்திற்கும், தலா 10 விண்ணப்பதாரர்கள் வீதம், 20 இணை ஆணையர் மண்டலத்திலிருந்து 200 விண்ணப்பதாரர்கள் மட்டும் மண்டல இணை ஆணையரின் பரிந்துரையின் பேரில் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படும் 200 விண்ணப்பதாரிகளையும், ஒரே பயணமாக அல்லாமல் 2 அல்லது 3 பயணங்களாக பிரித்து அழைத்துச் செல்ல நேரிடும் போது, ஒவ்வொரு பயணத்திற்கும் குலுக்கல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவர் என அந்த நிபந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்