வேலுநாச்சியாரின் வீரத்தை பாராட்டிவிட்டு பிரதமரே இப்படி செய்யலாமா? மத்திய அரசை லெப்ட் ரைட் வாங்கிய ராமதாஸ்.!

By vinoth kumarFirst Published Jan 18, 2022, 6:21 AM IST
Highlights

டெல்லியில் 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் குடியரசு நாள் அணிவகுப்பில் வஉசி, பாரதியார், வேலுநாச்சியார் மற்றும் மருது சகோதரர்கள் உருவங்கள் அடங்கிய தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. அதற்காக கூறப்படும் காரணம் ஏற்க முடியாதது.

டெல்லியில் 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் குடியரசு நாள் அணிவகுப்பில் வஉசி, பாரதியார், வேலுநாச்சியார் மற்றும் மருது சகோதரர்கள் உருவங்கள் அடங்கிய தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது என ராமதாஸ் தெரித்துள்ளார்.

குடியரசுத் தின அணிவகுப்பில் இடம் பெறும் ஊர்தி அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம்பெறவில்லை என்ற தகவல் வெளியானது. இதற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், குடியரசு நாள் அணிவகுப்பில் ஏற்க முடியாத காரணங்களைக் கூறி தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு இடம் மறுக்கக் கூடாது என ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- டெல்லியில் 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் குடியரசு நாள் அணிவகுப்பில் வஉசி, பாரதியார், வேலுநாச்சியார் மற்றும் மருது சகோதரர்கள் உருவங்கள் அடங்கிய தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது. அதற்காக கூறப்படும் காரணம் ஏற்க முடியாதது.

இந்திய விடுதலையின் 75-ஆவது ஆண்டு கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பான தருணத்தில் விடுதலைக்காக போராடிய இவர்களின் உருவம் அடங்கிய அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம் பெறுவதே சிறப்பு. அவர்களை வெளிநாட்டு தலைவர்களுக்கு தெரியாது என்று கூறுவது தவறான வாதம்.

வ.உ.சியின் 150ஆவது ஆண்டு விழா இப்போது கொண்டாடப்படுகிறது. பாரதியார் உலகறிந்த  கவிஞர். வேலுநாச்சியாரின் வீரத்தை அண்மையில் தான் பிரதமர் பாராட்டியிருந்தார். மருது சகோதரர்கள் வேலுநாச்சியாரின் போராட்டத்தை தொடர்ந்தவர்கள். இவற்றை விட வேறு என்ன தகுதி வேண்டும்?

3. வ.உ.சியின் 150 ஆவது ஆண்டு விழா இப்போது கொண்டாடப்படுகிறது. பாரதியார் உலகறிந்த கவிஞர். வேலுநாச்சியாரின் வீரத்தை அண்மையில் தான் பிரதமர் பாராட்டியிருந்தார். மருது சகோதரர்கள் வேலுநாச்சியாரின் போராட்டத்தை தொடர்ந்தவர்கள். இவற்றை விட வேறு என்ன தகுதி வேண்டும்?

— Dr S RAMADOSS (@drramadoss)

 

குடியரசு நாள் அணிவகுப்பில் ஏற்க முடியாத காரணங்களைக் கூறி தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு இடம் மறுக்கக் கூடாது. மத்திய அரசு அதன் முடிவை மாற்றிக் கொண்டு தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

click me!