தமிழகத்தில் ஜனநாயக படுகொலை நடந்து கொண்டிருக்கிறது; டிடிவி தினகரன்

First Published Sep 19, 2017, 12:56 PM IST
Highlights
The democratic assassination is taking place in Tamil Nadu - TTV


தமிழகத்தில் நிலவும் அரசியல் நிலைப்பாடு குறித்து ஆளுநர் நடுநிலை தவறாமல் நல்ல முடிவெடுப்பார் என தாம் காத்துக் கொண்டிருப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தமிழக அரசியல் பரபரப்பு உச்சத்தை அடைந்துள்ள நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் இன்று சென்னை திரும்புகிறார்.

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நாளையே எடுத்துக்கொள்ளப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் தமிழகத்தில் நிலவும் அரசியல் நிலைப்பாடு குறித்து ஆளுநர் நடுநிலை தவறாமல் நல்ல முடிவெடுப்பார் என தாம் காத்துக் கொண்டிருப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அதிமுக அம்மா அணி துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஜனநாயக படுகொலை நடந்து கொண்டிருப்பதாக கூறினார்.  ஆளுநர் நடுநிலை தவறாமல் நல்ல முடிவு எடுப்பார் என தாம் காத்துக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தை பாதிக்கும் பிரச்சனைகளுக்கு, மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம் என்று டிடிவி தெரிவித்தார். 

மேலும் பேசிய அவர், காவல்துறை நடுநிலைமையோடு செயல்பட வேண்டும் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.

click me!