
சட்டப்பேரவை தலைவரின் அதிகாரம் குறித்து கருத்து தெரிவிப்பது உரிமை மீறும் செயல் என்றும் டிடிவி தினகரன், கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னை, பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கிளை தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை ஜெயலலிதா அரசு தொடர வேண்டும் என்று நினைக்கின்றனர்.
சபாநாயகர் தனபாலின் முடிவு குறித்து கருத்து சொல்வது உரிமை மீறல் விஷயம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். எம்.எல்.ஏ.க்கள் மீதான நடவடிக்கை குறித்து கருத்து கூற முடியாது என்றும், டி.டி.வி. தினகரன், கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து வருகிறார் என்றும் அவர் கூறினார்.
அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் இருமொழிக் கொள்கையில் நாங்கள் தெளிவாக உள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.