நீங்க என்ன சொன்னாலும் அனுமதிக்க முடியாது - 2வது முறை எடப்பாடிக்கு பல்பு கொடுத்த உயர்நீதிமன்றம்...!

 
Published : Sep 28, 2017, 05:20 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
நீங்க என்ன சொன்னாலும் அனுமதிக்க முடியாது - 2வது முறை எடப்பாடிக்கு பல்பு கொடுத்த உயர்நீதிமன்றம்...!

சுருக்கம்

The court also confirmed the same judgment in the 2nd Appeal Court of the Tamil Nadu Government after the High Court lifted the ban to bring students to the MGR century festival.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு மாணவர்களை அழைத்து செல்ல உயர்நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து தமிழக அரசின் 2 வது மேல்முறையீட்டு மனுவிலும் அதே தீர்ப்பை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 

தமிழகம் எங்கும் நடக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு பள்ளி மாணவர்களை அழைத்து சென்று சிரமபடுத்தகூடாது என கூறி சென்னையைச் சேர்ந்த, பாடம் நாராயணன் என்பவர் ஒரு வழக்கை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.

அதனை விசாரித்த  சென்னை உயர் நீதிமன்றம், எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளுக்கு மாணவ, மாணவியரை அனுமதிக்கக் கூடாது எனவும் இது போன்ற நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்தது.

முன்னேற்பாடுகளும் அனுமதியும் இல்லாமல் மாணவர்களை பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைப்பது முறையான செயல் அல்ல என கூறி, இந்த வழக்கை அடுத்த மாதத்துக்கு ஒத்தி வைத்தது உயர் நீதிமன்றம்.

இதையடுத்து விடுமுறை நாளிலாவது மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்க அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

விடுமுறை நாளிலும் எம்.ஜி.ஆர் விழாவில் மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து தமிழக அரசின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

இதைதொடர்ந்து அரசு சார்பில் மீண்டும் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. 


 

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..