புரட்சித் தலைவர் தீபாம்மா! புரட்சித் தலைவி மாதவன் சார்... இருக்குற பிரச்சனைல இவிங்க வேற!

 
Published : Sep 28, 2017, 04:49 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
புரட்சித் தலைவர் தீபாம்மா! புரட்சித் தலைவி மாதவன் சார்... இருக்குற பிரச்சனைல இவிங்க வேற!

சுருக்கம்

Deepa and madhavan video viral on social media

அப்போலோவில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டாரா? இல்லை அந்த இட்லியை யார் சாப்பிட்டது..? என்று, தமிழக மக்கள் தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கும் வேளையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும், அவரது கணவர் மாதவனும், "என் புருஷன் குழந்தை மாதிரி" படத்தில் வருவது போல்... அமெரிக்க ஜனாதிபதி முருகேசன் - வாழ்க வாழ்க ... எனக் கூவுவதைப்போல 9 கோடி தமிழர்களின் ஒரே தலைவி தீபாம்மா, இளைய புரட்சித் தலைவர் மாதவன் சார் என கூவுகிறார் அந்த தொண்டர்.
இதை மிகவும் மகிழ்ச்சியோடு கேட்கும் தீபாம்மா, மாதும்மா கேட்டு ரசிக்கின்றனர். இந்த வீடியோ  இப்போது வைரலாகி வருகிறது.

கன்பர்ம்டா இவங்க 2 பேர்ட்டயும் ஏதோ ஒரு அபூர்வ சக்தி இருக்கு.
இல்லைன்னா அந்த பக்தரோட கூவலை கேட்டு குபீர்னு சிரிக்காம நிற்க முடியுமா? 
மனசு ரொம்ப பேஜாரா இருந்தா இந்தப் பதிவைப் பார்த்தால் போதும் உங்கள் மனசு லேசாகி விடும். அப்படி ஒரு வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

"வருங்கால தமிழக முதல்வர் புரட்சித்தலைவி தீபாம்மா, புரட்சித் தலைவி அம்மாவுடைய வாரிசு தீபாம்மா, ஜெயிச்சால் கோட்டையை ஆளப்போகிற புரட்சித் தலைவி தீபாம்மா, இளைய புரட்சி தலைவி தீபாம்மா வாழ்க, நாளைய தமிழகத்தை ஆளப்போகிற புரட்சித்தலைவி தீபாம்மா வாழ்க என தொண்டைத்தண்ணி வத்த வத்தக் கூவிய அந்தத் தொண்டன் டிஃப்ரண்டா கூவுறதா நெனச்சி, பக்கத்துல தீபாம்மாவோடு நின்று கொண்டிருந்த தீபாவின் கணவரான மாதும்மாவைக் பார்த்து புரட்சித் தலைவி மாதவன் சார் வாழ்க... புரட்சித் தலைவி மாதவன் சார் வாழ்க... " வாங்குன காசுக்கு மேலயே கூவி தனது கூவலை முடித்துக்கொண்டார்.

அந்தத் தொண்டர் கூவும் போது " என் புருஷன் குழந்தை மாதிரி" படத்தில் லிவிங்ஸ்டனை புகழ்ந்து கோஷம் போட வடிவேலு ஒரு தொண்டரை காசு கொடுத்து கூட்டிக்கொண்டு வந்து கூவ வைப்பார். அவரோ வருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசன் வாழ்க எனக் கூவுவார். அப்போது வடிவேலு சொல்லும் ''வாங்குன காசுக்கு மேல கூவுறாண்டா ங்கொய்யால'' என்பதை நினைவு படுத்துகிறது  இந்த வீடியோ பதிவு.

அதுமட்டுமல்ல...  இளைய புரட்சித் தலைவி தீபாம்மா... ஒம்பாேது காேடி தமிழர்களின் ஒரே தலைவி தீபாம்மா... ஒன்பது கோடி தமிழக மக்களின் பாதுகாவலர் தீபாம்மா... நாளைய சரித்திரம் தீபாம்மா...

சொல்ல முடியாது... தர்ம யுத்தம், தர்மயுத்தம் எனச் சொல்லிச் சொல்லியே துணை முதல்வர் பொறுப்புக்கு வந்த ஓ.பி.எஸ் மாதிரியோ இல்ல கூவத்தூர் ட்ரிப்புக்குப்பின் முதல்வராக அவதாரமெடுத்த இ.பி.எஸ் மாதிரியோ வந்துட்டாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை... நாமளும் எதுக்கும் வாழ்கன்னு சொல்லி வைப்போமென ஆளாளுக்கு தீப்பாம்மா மாதவன் சார்  என்று... வாழ்க வாழ்க என வாங்குன காசுக்கு மேல கூவுறாங்கய்யா!

"மைண்ட் வாய்ஸ்...  நாளைக்கு ஊருக்குப் போன கையோட 'புரட்சித்தலைவர் தீபாம்மா, புரட்சித்தலைவி மாதவன் சார் பேரவை'ல  ஒரு போஸ்டிங் வாங்கிட்டு வந்துரனும்..."

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..