இந்தியாவை யார் சீக்கிரம் விற்பது என்ற போட்டி பாஜக- காங்கிரஸ் இடையே நடக்கிறது.. சீறும் சீமான்.

By Ezhilarasan BabuFirst Published Apr 1, 2021, 12:41 PM IST
Highlights

தொடர்ந்து பேசிய அவர், குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் 1500 என்று போட்டி போட்டு கொடுக்கிறார்கள். 83 சதவீதம் படித்தவர்கள் உள்ள தமிழ்நாடு மக்கள் யோசித்து செயல்பட வேண்டும் இவை அனைத்தும் உங்கள் பணம் தான். 

தீய அரசியலின் தொடக்கமே திமுக தான் எனவும், அண்ணாவுடனே அனைத்துமே முடிந்து விட்டதாகவும், கருணாநிதி திமுக தலைவராக பதவியேற்றவுடன் நேர்மை ஒழுங்கம் ஒழிந்துவிட்டது எனவும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சட்டமனற தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட இருக்கும் சங்கரை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எம். எம்.டி ஏ காலனியில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ஆக சிறந்த தொடக்கத்தை தொடங்கி இருக்கிறோம். திமுக-அதிமுகவை வீழ்த்தி ஆட்சிக்கு வருவது கடினம் என்கிறார்கள். 

இந்த கட்சிகள் மிக மோசமான தோல்வியை சந்திக்க இருக்கிறது என்ற அவர், அதிமுக - திமுக இரண்டுமே ஒரே கட்சி தான், அதிமுக கட்சி கொடியில் அண்ணா இருக்கிறார், திமுகவில் அண்ணா இல்லை அவ்வளவு தான் வித்தியாசம், இரண்டு கட்சியின் கோட்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இரண்டுமே ஊழல் கட்சி தான் என்றார்.  

அதே போல் தான் பாஜக - காங்கிரஸ் கோட்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. சி ஏ ஏ கொண்டு வந்தது காங்கிரஸ், செயல்படுத்தியது பாஜக. காங்கிரஸ் பாஜகவிடையே ஒரு  போட்டி நடைபெறுகிறது என்ன போட்டி என்றால் யார் முதலில் சீக்கிரம் இந்தியாவை விற்பது என்பது தான் அது. நான் வாக்கு கேட்டு வரவில்லை என் மீது நம்பிக்கை இருந்தால் ஓட்டு போடுங்கள் இல்லையென்றால் சுடுகாட்டில் போடுங்கள். அடிமை என்றால் என்ன என்று தெரியாமலையே ஒரு கூட்டம் இருப்பதாக கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் 1500 என்று போட்டி போட்டு கொடுக்கிறார்கள். 83 சதவீதம் படித்தவர்கள் உள்ள தமிழ்நாடு மக்கள் யோசித்து செயல்பட வேண்டும் இவை அனைத்தும் உங்கள் பணம் தான். திமுக அதிமுகவை தூக்கி வீசி விட்டு புதிய கட்சிக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற அவர், தீய அரசியலின் தொடக்கமே திமுக தான் எனவும், அண்ணாவுடன் அனைத்துமே முடிந்து விட்டதாகவும், கருணாநிதி திமுக தலைவராக பதவியேற்றவுடன் நேர்மை ஒழுங்கம் ஒழிந்துவிட்டது என்றார். 

மேலும், மீனவன்,  மாணவன் வேளாண்மை செய்பவன் என பலர் போராடுகிறார்கள் ஆனால் தமிழகம்  வெற்றிநடை போடுகிறது என்று சொல்கிறார்கள். இந்தியவிலேயே அதிக சம்பளம் வாங்கும் எம்.எல்.ஏக்கள் தமிழகத்தில் தான் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வருகிறது, ஆனால் மாறுதல் வருவது இல்லை. மாறுதலுக்காக விவசாயி சின்னத்தில் ஓட்டு போடுங்கள், ஒரு முறை எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் எனவும் உங்கள் மீது இருக்கும் அன்பில் தான் இந்த வெயிலில் நின்று ஓட்டு கேட்கிறேன் என தெரிவித்தார்.
 

click me!