#Exclusive கமலை முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தது ஏன்?... சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டி!

Web Team   | Asianet News
Published : Apr 01, 2021, 12:35 PM ISTUpdated : Apr 01, 2021, 12:38 PM IST
#Exclusive கமலை முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுத்தது ஏன்?... சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டி!

சுருக்கம்

தமிழக அரசியலில் மூன்றாவது அணி வெற்றி பெற முடியுமா? அகில இந்தியா சமத்து மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார்  தன்னுடைய   அர்சியல் குறித்தும், மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைந்தது குறித்தும் ஏசியாநெட் ஆங்கில செய்திதளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியைக் காணலாம்... 

தமிழக அரசியலில் மூன்றாவது அணி வெற்றி பெற முடியுமா? அகில இந்தியா சமத்து மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார்  தன்னுடைய   அர்சியல் குறித்தும், மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைந்தது குறித்தும் ஏசியாநெட் ஆங்கில செய்திதளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியைக் காணலாம்... 


கமல் ஹாசனை கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ளீர்கள், அவரை தேர்வு செய்ய உங்களை நம்ப வைத்தது எது?

25 ஆண்டுகளாக அரசியல் களத்தில் உள்ளீர்கள். சட்டமன்றம், நாடாளுமன்றத்திலும் அங்கம் வகித்துள்ளீர்கள். ஆனால் நீங்கள் ஏன் தலைமை ஏற்கவில்லை என பலரும் என்னை கேட்கிறார்கள். இது ஒரு கொள்கை உடன்படிக்கை சம்பந்தமானது. கமலின் தலைமையை பொறுத்தவரையில் அவர் மூத்தவர், நாடு முழுவதும்  நன்கு அறியப்பட்ட நபர் என்பதை நான் உணர்ந்திருந்தால் தான் அவரை தலைமையேற்க வைத்தேன். நாடாளுமன்ற தேர்தலின் போது மக்கள் நீதி மய்யத்தின் வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாக இருந்தது, அது நிச்சயம் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். ஐ.கே.கேவும், எனது கட்சியும் 234 தொகுதிகளிலும் பணியாற்றுவது என்ற முடிவுடன், கமல்ஹாசனை கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவித்தோம். 

கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் திமுகவிற்கு சாதகமாக வந்துள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

எனக்கு கருத்துக்கணிப்புகளில் நம்பிக்கை கிடையாது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தான் வெற்றி பெறும் என கூறப்பட்டது. ஆனால் அதிமுக வெற்றி பெற்றது. எனவே கருத்துக் கணிப்புகளை பெரிதாக எண்ண வேண்டாம். அது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். ஆனால் மக்கள் நினைத்தால் அதை நிச்சயம் மாற்றலாம். அப்படி ஒரு மாற்றம் நடத்தால் அது வியக்கத்தகு வகையில் இருக்கும். 

உங்களுடைய கொள்கையின் அடிப்படையில் வாக்களார்களுக்கு என்ன மாதிரியான வாக்குறுதிகளை வழங்குகிறீர்கள்? 

எங்களுடைய அடிப்படை கொள்கை அனைவருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு. இதை இன்றைய இளைஞர்களிடம் தெளிவாக கொண்டு சேர்க்க வேண்டும். ஒவ்வொரு 100 கிலோ மீட்டரிலும் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான இடம் இருக்க  வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக திட்டமிட்டுள்ளோம், செயல்படவோம் செய்வோம். 

தமிழகத்தின் கடன் சுமையை குறைக்க ஆராய்ந்து வருகிறோம். அரசு விளம்பரங்கள் போன்ற செலவினங்கள் கடுமையாக குறைக்கப்பட வேண்டும். நாங்கள் இலவசங்களுக்கு முற்றிலும் எதிரானவர்கள் அல்ல,  கமல் ஹாசன் அறிவித்துள்ள இலவச மடிகணினி இந்த கோவிட் நேரத்தில் மக்களுக்கு மிகவும் பயனுள்ளது. மீண்டும் தொற்று பரவி வருகிறது. கல்வி மற்றும் வேலைக்காக மக்கள் வீடுகளிலேயே மீண்டும் இருக்க வேண்டி வரலாம். மேலும் கிராமம், நகரம் என அனைத்து பகுதிகளிலும் வைஃபை சேவை அதிகரிக்கும் என உறுதி அளித்துள்ளோம். 

இடஒதுக்கீடு முக்கியம், ஆனால் அதற்கு முன்னதாக சாதி வாரிய கணக்கெடுப்பிற்காக தனிநபர் ஆணையம் அமைக்கப்பட கணக்கெடுக்கும் பணியை நடத்த வேண்டும். வெறும் அறிவிப்புகளை மட்டும் விடுவதில் பயனில்லை. நான் எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்திற்கான  இடஒதுக்கீட்டிற்கும் எதிரானவன் இல்லை. நான் அதை மிகவும் பாராட்டுகிறேன், ஆனால் எல்லோரையும் கவனிக்க வேண்டும். வெறும் தேர்தல் வாக்குகளுக்கான அறிவிப்பாக மட்டும் இருந்துவிடக்கூடாது. 

கிராமப்புறங்களுக்கு முறையான உட்கட்டமைப்பு வசதி இல்லை. தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. முறையாக கழிவுநீர் கால்வாய் வசதிகள் இல்லாத போது, அவர்களுக்கு இலவச வாஷிங் மெஷின் கொடுப்பதால் என்ன பயன். பல கிராமங்களில் கழிப்பறைகள், கழிவுநீர் வடிகால் அமைப்புகள் போன்ற வசதிகளை உருவாக்க வேண்டும். 

நீங்கள் அதிமுக - பாஜகவின் 'B' டீம் என திமுக -காங்கிரஸ் கூட்டணி நம்புகிறது. இதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்? 

சரத்குமார் சிரித்துக்கொண்டே... மாற்று சிந்தனை கொண்டவர்கள் ஒன்றிணையும் போதெல்லாம், அவர்கள் 'B' அணியாக பார்க்கப்படுகிறார்கள். நாங்கள் ஏ டீம் என நினைக்கிறேன். நாங்கள் ஊழல் இல்லாதவர்கள், பணம் சம்பாதிப்பதற்கான எவ்வித திட்டமும் எங்களிடம் கிடையாது. அரசியலை பணம் சம்பாதிக்கும் இடமாக நாங்கள் பார்க்கவில்லை, மாறாக சேவை செய்யும் இடமாக தான் பார்க்கிறோம். எனவே இந்த தேர்தலில் எங்களுக்கான அடையாளத்தை நிச்சயம் உருவாக்குவோம்.

அரசியல் பற்றி உங்கள் கருத்து என்ன? 

அரசியல் என்பது சமூக சேவையின் நீட்டிப்பு. அரசியல் கட்சி தலைவர்கள் மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். தமிழகத்தில் உள்ள கிராமங்களுக்குச் செல்லும் போது அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை. இளைஞர்களிடம் கல்வி உள்ளது, ஆனால் நிலையான பொருளாதாரம் இல்லை. மக்கள் இன்னமும் ஓட்டுக்கு பணம் வாங்குகிறார்கள் என்றால், அவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள் என்று அர்த்தம். மக்களின் பிரச்சனைகள் பேசப்படவில்லை. அரசியல் முற்றிலும் ஜனநாயக ரீதியாகவும்,  வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். மக்களுக்காக ஏதாவது செய்ய ஆர்வமுள்ள எந்தவொரு சாமானியரும் தேர்தலில் போட்டியிட முடியும். அரசியலைப் பற்றி நான் அப்படித்தான் நினைக்கிறேன். 
 

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!