ரஜினிக்கு இந்ந விருது எப்போதே கிடைத்திருக்க வேண்டும். சூப்பர் ஸ்டாரை எண்ணி பூரிப்படையும் திமுக தலைவர் ஸ்டாலின்

By Ezhilarasan BabuFirst Published Apr 1, 2021, 12:19 PM IST
Highlights

தமிழ்த் திரைஉலகில் தன்னிகரற்ற கலைஞன் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதாசாகேப் பால்கே விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என திமுக தலைவர் ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தமிழ்த் திரைஉலகில் தன்னிகரற்ற கலைஞன் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதாசாகேப் பால்கே விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என திமுக தலைவர் ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 51வது தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார. அதில், இன்றும் என்றும் இனிய நண்பரும் - தமிழ்த்திரையுலகில் தன்னிகரற்ற கலைஞனுமாகிய ரஜினிகாந்த் அவர்களுக்கு, 'தாதா சாகேப் பால்கே விருது' கிடைத்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். 

எப்போதோ அவருக்கு இந்த விருது தரப்பட்டிருக்க வேண்டும். தாமதமாகத் தரப்பட்டுள்ளது. நடிப்பில் மட்டுமல்ல நட்பிலும் இலக்கணமான ரஜினி அவர்களை வாழ்த்துகிறேன்! பாராட்டுகிறேன்! அவரது கலைப்பயணம் என்றென்றும் இனிதே தொடரட்டும். தமிழ்த்திரை, நண்பர் ரஜினி அவர்களால் செழிக்கட்டும்! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் ரஜினிகாந்திற்கு வாழ்த்துதெரிவித்துள்ளார். அதில்  இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு அறிவித்த மத்திய அரசிற்கும், பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி. நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராக ரஜினியின் பங்களிப்பிற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதேபோல் பாஜக மாநிலத் துணைத்தலைவர் அண்ணாமலையும் நடிகர் ரஜினி காந்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பகுதிதில் வெளியிட்டுள்ள பதிவில், இன்று superstar ரஜினி அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாதா சாஹிப் பால்கே விருது கிடைத்ததற்கு என் வாழ்த்துக்களை கூறினேன். ரஜினி அவர்கள் ஒரு மாமனிதர், அனைவரையும் சமமாக மதிப்பவர், அவருக்கு இவ்விருது கிடைத்திருப்பது அவர் உழைப்பிற்கும், தமிழர்களுக்கு அவர் ஒரு பலமாக இருப்பதற்கும் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

 

click me!