தமிழக அரசுக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிக்கும்.. டுவிட் போட்டு அதிர வைத்த பா.சிதம்பரம்..

By Ezhilarasan BabuFirst Published Apr 23, 2021, 11:20 AM IST
Highlights

தமிழகத்தில் 18  முதல் 44 வயது உடையவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் எனவும், அதற்கான செலவை தமிழக அரசு ஏற்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்பதாக முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 18  முதல் 44 வயது உடையவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் எனவும், அதற்கான செலவை தமிழக அரசு ஏற்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்பதாக முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கொரோனா உள்ளிட்ட பல விவகாரங்களில் தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை விமர்சித்து வந்த நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பை அவர் வரவேற்று பாராட்டி உள்ளார். 

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. தேசிய அளவில் அன்றாடம் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால்  பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது.  சிகிச்சைக்காக தேவைப்படும் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் ஆக்சிஜன் அளவு போதாத நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவது குறித்தும், அதன் உற்பத்தி அதிகரித்து அவற்றை மாநிலங்களுக்கு தேவைக்கேற்ப வினியோகம் செய்வது குறித்தும் உயர்மட்ட அதிகாரிகளுடன் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில் தமிழகத்திலும் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதைத் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வரிசையில் தமிழகத்தில் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்றும், அதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இதை மேற்கோள் காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பா. சிதம்பரம் தமிழ்நாட்டு மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன் என்றும், இந்த நல்ல திட்டங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களை எப்படி பெறுவது என்று தமிழ்நாடு அரசு அனைத்து கட்சிகளையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியின் முழு ஆதரவு இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

click me!