மீண்டும் பரபரப்பு... ஸ்டெர்லை ஆலை விவகாரத்தால் கல்வீச்சு... விரட்டியடித்த போலீஸார்..!

By Thiraviaraj RMFirst Published Apr 23, 2021, 10:28 AM IST
Highlights

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? வேண்டாமா? என்ற கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை 8 மணி அளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? வேண்டாமா? என்ற கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை 8 மணி அளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரித்து வழங்க அனுமதிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இடைக்கால மனு தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத்தில் அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது ஸ்டெர்லைட் ஆலையை திறந்து அங்கு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.இது தொடர்பாக, பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு தரப்பு தெரிவித்த நிலையில் இந்த இடைக்கால மனு மீதான விசாரணை உச்சநிதிமன்றத்தில் இன்று மீண்டும் நடைபெற உள்ளது.

இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆதராவளர்கள், எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் மாறி மாறி கருத்துகளை தெரிவித்ததால் மோதல் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருதரப்பினரையும் சமதானம் செய்ய முயற்சித்தனர். வாக்குவாதம் முற்றியதால் போலீசார் இருதரப்பினரையும் விரட்டியடித்தனர்.

இந்த கூட்டத்தில் முடிவாக ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று பெரும்பாலானவர்கள்தெரிவித்துள்ள நிலையில் கூட்டம் நிறைவடைந்தது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக காலை 11 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்ய வேண்டியது உள்ளதால் இந்த கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அப்பகுதி பெண் ஒருவர், ‘’வேதாந்தா என்ற கொரோனா எங்கள் தலைமுறையே அழித்துவிடும்’’ என ஆவேசமாகக் கூறினார். 
 

click me!