திமுக கூட்டணிக்கு எதிர்ப்பு...! காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜினாமா? அதிர்ச்சியில் திமுக

By Ajmal KhanFirst Published May 20, 2022, 8:31 AM IST
Highlights

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை திமுக கொண்டாடி வரும் நிலையில், இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட தலைவர் ஒருவர் ராஜினாமா செய்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேரறிவாளன் விடுதலைக்கு காங்.எதிர்ப்பு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் நேற்று முன் தினம் விடுவித்தது. இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரறிவாளனை நேரில் சந்தித்து ஆரத் தழுவி பேசினார். இதே போல பல இடங்களில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். அதே வேளையில் பேரறிவாளன் விடுதலைக்கு காங்கிகரஸ் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம் என தெரிவித்து இருந்தது.

மாவட்ட தலைவர் ராஜினாமா

மேலும் பேரறிவாளன் விடுதலையை எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி தங்களது எதிர்ப்புகளை காட்ட வேண்டும் என தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் தருமபுரி மாவட்ட தலைவர் சிற்றரசு வெளியிட்டுள்ள ராஜினாமா கடிதத்தில், உலகம் போற்றும் உத்தம தலைவர் அமரர் ராஜிவ் காந்தி  அவர்களை கொன்ற கொலை குற்றவாளிகளை கொண்டாடும் கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வதை என மனம் ஏற்கவில்லையென தெரிவித்துள்ளார். எனவே மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பில் இருந்து விலகி கொள்வதாக கூறியுள்ளார். எனவே எனது பதவி வலகலை மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். திமுக கூட்டணியில் முக்கிய கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பதவி விலகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!