ராஜீவ் முக்கியமா? ராஜ்யசபா முக்கியமா? காங்கிரசை போட்டு தாக்கும் அண்ணாமலை..!

By vinoth kumarFirst Published May 20, 2022, 7:23 AM IST
Highlights

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்ட பேரறிவாளனை உச்சநீதிமன்றம் தனக்கிருக்கும் சிறப்பு அதிகாரத்தின் படி விடுதலை செய்திருக்கிறது. இந்த தீர்ப்பில் எந்த இடத்திலும் பேரறிவாளன் நிரபராதி என்று குறிப்பிடப்படவில்லை. அவர் குற்றவாளிதான் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

பாஜகவை பொறுத்தவரை 7 பேருமே குற்றவாளிகள் தான். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. சிறையில் இருந்து வெளி வந்திருப்பவர் கொண்டாடப்படக் கூடியவர் அல்ல என அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்ட பேரறிவாளனை உச்சநீதிமன்றம் தனக்கிருக்கும் சிறப்பு அதிகாரத்தின் படி விடுதலை செய்திருக்கிறது. இந்த தீர்ப்பில் எந்த இடத்திலும் பேரறிவாளன் நிரபராதி என்று குறிப்பிடப்படவில்லை. அவர் குற்றவாளிதான் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனால், பேரறிவாளன் விடுவிக்கப்பட்டதை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் நடந்து கொண்ட விதம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நிரபராதி விடுவிக்கப்பட்டது போன்று முதலமைச்சர் நடந்து கொள்வதாகவும், அவரது இந்த நடவடிக்கையை பார்க்கும்போது, அரசியலமைப்பு சட்டத்தின் மீது சத்தியப்பிரமாணம் செய்துவிட்டுத் தான் அவர் முதலமைச்சராக பதவியேற்றாரா என்ற சந்தேகம் எழுகிறது.

பாஜகவை பொறுத்தவரை 7 பேருமே குற்றவாளிகள் தான். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. சிறையில் இருந்து வெளி வந்திருப்பவர் கொண்டாடப்படக் கூடியவர் அல்ல. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது. காங்கிரஸ் கட்சி ஒரு ஆளுமையான கட்சி என்றால் திமுக அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும். சித்தாந்த ரீதியாக இந்த சூழ்நிலையை விட காங்கிரஸ் கட்சிக்கு சவாலான சூழல் வேறு எதுவும் இருக்க முடியாது. பேரறிவாளன் பிரச்சனையில் வாயில் வெள்ளை துணியை கட்டிக்கொண்டு போராட்டம் என்றும் நாளை திமுக கொடுக்கக்கூடிய ராஜ்யசபா சீட்டுக்காக இங்கே போய் நிற்போம் என்றால் தமிழக மக்களை நீங்கள் முட்டாள்கள் என கருதுகிறீர்கள் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க;- கட்சி தலைவரின் தலையை எடுத்த குற்றவாளியை கொஞ்சி குலாவும் திமுக.. கூட்டணி தொடருமா காங்கிரஸ்? அலறவிடும் பாஜக.!

click me!