மெரினாவில் இடம் ஒதுக்க மறுப்பு; எடப்பாடி வீட்டின் முன் பாதுகாப்பிற்காக கமேண்டோ படை குவிப்பு!

First Published Aug 7, 2018, 10:09 PM IST
Highlights

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்ய அனுமதி அளிக்காத தமிழக அரசுக்கு அரசியல் கட்சி மற்றும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்ய அனுமதி அளிக்காத தமிழக அரசுக்கு அரசியல் கட்சி மற்றும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எடப்பாடி வீடு முன்பு கமேண்டோ படை குவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் 5 முறை முதல்வராக பதவி வகித்தவர். இந்திய அரசியலில் மூத்த தலைவருமான கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது இழப்பை ஈடு செய்ய முடியாது என திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூறியுள்ளனர். கருணாநிதி தன் உயிரினும் மேலாக நேசித்த அறிஞர் அண்ணாவின் சமாதி அருகே அவரை நல்லடக்கம் செய்ய விரும்பி மெரினாவில் இடம் கோரி இருந்தனர்.

 

அதன் அடிப்படையில் தான் கருணாநிதி நலம் விசாரிக்க வந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் உருக்கத்தோடு கனிமொழி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் கருணாநிதி உடல் நிலை மதியம் மோசமான நிலையில் மு.க.ஸ்டாலின் கனிமொழி, அழகிரி, மு.க.செல்வம், ஐ. பெரியசாமி, துரைமுருகன் ஆகியோர் சென்று எடப்பாடியிடம் மீண்டும் வேண்டுகோள் விடுத்தனர். 

ஆனால் அதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி சட்ட சிக்கல் என காரணம் கூறி மறுப்பு தெரிவித்தார். தொடர்ந்து கிண்டியில் காமராஜர் நினைவிடம் அருகே கலைஞருக்காக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கலைஞரை அண்ணாவின் அருகே சேர்த்துவிட திமுகவினர் கடுமையாக போராடி வந்தனர். காவேரி மருத்துவமனை முன் நடந்து வந்த இந்த போராட்டம் உச்சத்தை எட்டிய நிலையில் தடுப்புகளை மீறி வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறியதாக தடியடி நடத்தப்பட்டது. இதனை திமுகவினர் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். இதனால் முதல்வரின் பாதுகாப்பு கருதி அவரது வீட்டின் முன்பு  கமேண்டோ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

click me!