15 PM....11 CM ...நேருக்கு நேர் சந்தித்த கருணாநிதி!!! யாருக்கும் கிடைக்காத பெருமை இது!

Published : Aug 07, 2018, 09:59 PM IST
15 PM....11  CM ...நேருக்கு நேர் சந்தித்த கருணாநிதி!!!  யாருக்கும் கிடைக்காத பெருமை இது!

சுருக்கம்

கலைஞர் கருணாநிதி இன்று மாலை இயற்கை எய்தியதை தொடர்ந்து தமிழக மக்கள் அனைவரும் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.

கலைஞர் கருணாநிதி இன்று மாலை இயற்கை எய்தியதை தொடர்ந்து தமிழக மக்கள் அனைவரும் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர். அவருடைய உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து சற்று நேரத்த்திற்கு முன்பாக கோபாலப் புறத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. தமிழக மற்றும் இந்திய அரசியலில் தனக்கென தனி முத்திரைப் பதித்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதி ஆவர். தமிழுக்கும், தமிழகத்திற்கும் முதலமைச்சராக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர். பல துறையில் வல்லவராக திகழ்ந்த கருணாநிதி பல பிரதமர்களையும், பல முதலமைச்சர்களையும் சந்தித்த பெருமையையும் உடையவர்.


ஜவஹர்லால் நேரு, குல்சரிலால் நந்தா, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, மொராஜி தேசாய், சரண் சிங், ராஜிவ் காந்தி, வி.பி. சிங், சந்திர சேகர், பி.வி. நரசிம்ம ராவ், அடல் பிஹாரி வாஜ்பாய், ஹெச்.டி. தேவ கௌடா, இந்தர் கே. குஜ்ரால், மன்மோகன் சிங், நரேந்திர மோடி என 15  பிரதமர்கள் ஆட்சிகாலத்தில் அரசியல் செய்திருக்கிறார்.

ராஜாஜியில் துவங்கி, டி பிரகாசம், ஓ.பி. ராமசாமி ரெட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், சி.என். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம் என 11 முதல்வர்களின் ஆட்சிக்காலத்தில் அரசியல் செய்திருக்கிறார் கருணாநிதி.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ் பிடிவாதத்தால் தத்தளிக்கும் பாஜக.. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலைமை..? அமித் ஷாவிடம் மோடி ஆவேசம்..!
அன்புமணிக்கு பாமகவில் ஒரு துளியும் உரிமை இல்லை..! நோட்டீஸ் விட்ட ராமதாஸ்..!