மனைவியுடன் சேற்றில் இறங்கி நாற்று நட்ட கலெக்டர்.. பலரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும் ஒற்றை புகைப்படம்.

By Ezhilarasan BabuFirst Published Sep 28, 2021, 11:10 AM IST
Highlights

பின்னர் தனது மனைவி ஷிவாலிகா உடன் மாவட்ட ஆட்சியர் நாற்று நடும் பணியை ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்தார், பின்னர் விவசாயிகளிடம் இருந்த நாட்டுக்கட்டை கேட்டு வாங்கிய அவர், திடீரென சேற்றில் இறங்கி சகதி என்றும் பாராமல் நாற்று நட்டு பயின்றார்.

திருப்பத்தூர் அருகே  கலெக்டரும் அவரது மனைவியும் திடீரென சேற்றில் இறங்கி நாற்று நட்ட சம்பவம் அங்கிருந்த விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும,  ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. "விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கால் வைக்க முடியும்" என்ற தத்துவ மொழி நாடு முழுவதும் பரவி விரவி வருகிறது. ஒரு சிலர் இந்த உன்னத கருத்தை உணர்ந்து பெரு நிறுவனங்களில் கைநிரைய சம்பள் வாக்கும் பலர் தங்களது பதிவிகளை ராஜினாமா செய்துவிட்டு விவசாயத்தை  இறங்கி சாதித்து வருவதை நாம் ஆங்காங்கே கண்கூடாக பார்க்க முடிகிறது. 

அந்த வகையில் விவசாயிகளையும், விவசாயத்தையும் பெருமைப்படுத்தும் பல நிகழ்ச்சி சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் ஆங்காங்கே ஏரி, குளங்கள், குட்டைகள் நிரம்பி வருவதால், விவசாயிகள் நிலத்தில் நாற்றுவிட்டு அதை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் திருப்பத்தூர் அருகே மூக்கனூர் கிராமத்தில் நாற்று நடவு பணியில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிராமத்தில் நாற்று நடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா திடீரென ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் வரப்பில் நடந்து வருவதைப் பார்த்த விவசாயிகள் அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

பின்னர் தனது மனைவி ஷிவாலிகா உடன் மாவட்ட ஆட்சியர் நாற்று நடும் பணியை ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்தார், பின்னர் விவசாயிகளிடம் இருந்த நாட்டுக்கட்டை கேட்டு வாங்கிய அவர், திடீரென சேற்றில் இறங்கி சகதி என்றும் பாராமல் நாற்று நட்டு பயின்றார். அதைப்பார்த்த அவரது மனைவியும், திடீரென நிலத்தில் இறங்கி அவரும் நாற்று நட்டு பழகினார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கலெக்டரும் அவரது மனைவியும் விவசாயிகளோடு விவசாயிகளாக நாற்று நட்டனர். அவர்கள் நாற்று நடுவதை அங்கு ஏராளமான விவசாயிகள் திரண்டு வேடிக்கை பார்த்தனர். கலெக்டர் அவரது மனைவியுடன் நாற்று நட்டதற்கான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கலெக்டரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். 

 

click me!