
தலைமை செயலக ஊழியர்கள் நாளை முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட பொதுக்குழுவில் முடிவு செய்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே வழக்கறிஞர் சேகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டத்திற்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்திவரும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
மேலும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் செப். 14 ஆம் தேதி க்குள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆனாலும் நீதிமன்ற உத்தரவை மீறி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனாலும் முதலமைச்சர் எடப்பாடி இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், தலைமை செயலக ஊழியர்கள் நாளை முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட பொதுக்குழுவில் முடிவு செய்துள்ளனர். இதனால் எடப்பாடிக்கு மேலும் தலைவலி இரட்டிப்பாக கூடியுள்ளது.