எங்க அடிச்சா எதிரணிக்கு வலிக்கும்... - சபாநாயகருடன் முதல்வர் ஆலோசனை...

First Published Sep 14, 2017, 7:11 PM IST
Highlights
Speaking to Dhanapal Chief Minister Edappadi Palanisamy has been holding consultations with the High Court for a vote of confidence.


நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், சபாநாயகர் தனபாலுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். 

ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தபோது விரைவில் பொதுக்குழு கூட்டி சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என எடப்பாடி தரப்பில் அறிவிப்பு வெளியானது. 

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து டிடிவிக்கு ஆதரவாக 19 எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் எடப்பாடியை நீக்க கோரி ஆளுநரிடம் மனு அளித்தனர். 

இதையடுத்து டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியில் உள்ள  விடுதியில் ஒரு வாரத்திற்கும் மேலாக தங்கியிருந்தனர். 

ஆனால் இதுவரை எவ்வித முடிவும் ஆளுநர் வெளியிடவில்லை. இதனால் டிடிவி எம்.எல்.ஏக்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள கூர்கில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ளனர். 

இதைதொடர்ந்து எடப்பாடி தரப்பு கூறியபடி பொதுக்குழுவில் சசிகலாவையும் தினகரனையும் நீக்கி தீர்மானங்களை நிறைவேற்றினர். 

இதையடுத்து எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதிக்க வேண்டும் என திமுக மற்றும் தினகரன் தரப்பு கோரிக்கையை ஏற்று வரும் புதன்கிழமை வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், சபாநாயகர் தனபாலுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அவர்களுடன் சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், அரசு வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆகியோர் உள்ளனர். 

click me!