"நீட் குறித்த முதலமைச்சர் உரைதான் பாஜக அலுவலகத்தில் குண்டு வீச காரணம்"..?? திமுகவை அலறவிட்ட அண்ணாமலை.

By Ezhilarasan BabuFirst Published Feb 10, 2022, 12:40 PM IST
Highlights

நீட் என்ற வார்த்தைக்கான அர்த்தமே தெரியாதவர் . பசிபிக் கடலுக்கும் , அட்லாண்டிக் கடலுக்கும் இடையிலான தூரம் போல குற்றவாளிககும் , படிப்புக்கும் இடையிலான தூரம் இருக்கிறது. அவர் குடிபோதையில் குண்டு வீசியதாக கூறும் காவல்துறை ஏற்கனவே ஒருமுறை டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி  அவர்  குண்டு வீசியுள்ளதாக கூறுவது நகைச்சுவையானது , கட்டுக்கதை என்றார்

பாஜக அலுவலகத்தில் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என்றும் யாரோ சிலரின் தூண்டுதலால் குண்டு வீச்சு நடந்துள்ளது என்றும்,  தனி மனிதர் செய்ய வாய்ப்பு இல்லை, என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்று அதிகாலை 1.20 க்கு கமலாலயத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 3 பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். பெட்ரோல் குண்டு கரைகள் காவல்துறையால் உடனடியாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது . 

இது தொடர்பான காவல் ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு மூலம் 6 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் குண்டு வீசியதாக கூறியுள்ளனர். நீட் நிலைப்பாட்டை கண்டித்து குண்டு வீசியதாக கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது. முதல்வரின்  உற்சாக உரையால் , தமிழகத்தில் ஸ்டாலின்  முதல்வரானவுடன் ரவுடிகளுக்கு வாழ்வு கிடைத்துள்ளது இதுபோன்ற சம்பவங்கள் பாஜகவிற்கு உற்சாகம் தருகிறது , காரணம் கட்சி வளர்கிறது என்று அர்த்தம் என்றார். நேற்று மாலை முதல் நாகையில் பாஜக பொறுப்பாளர் வாகனம் தீவைப்பு , சென்னை வார்டு 75 , திருப்பூர் வார்டு 44,  வேலூர் வார்டு 52 பணிமனைகள் சூறையாடப்பட்டுள்ளன. பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக NIA விசாரிக்க வேண்டும். 

முதல் தகவல் அறிக்கை பதிவதற்குள் காவல்துறை குண்டு வீச்சின் தடயங்களை அழித்துள்ளது , குற்றவாளியின் வாக்குமூலம்  சினிமா போலிஸ் வசனம் போல உள்ளது. தமிழத்தில் திமுக ஆட்சியில்  கொலை , கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு , சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அதிகரித்துள்ளது.குண்டு வீச்சு சம்பவம் யாரோ சிலரின் தூண்டுதலால் நடந்துள்ளது. தனி மனிதர் செய்ய வாய்ப்பு இல்லை , இதற்கு பின்னணி இருக்கிறது. குற்றவாளி ஏற்கனவே 3 முறை பெட்ரோல் பாம்ப் வீசியவர் என்கின்றனர். படிப்பறிவற்ற அவர் , நீட் என்ற வார்த்தைக்கான அர்த்தமே தெரியாதவர் . பசிபிக் கடலுக்கும் , அட்லாண்டிக் கடலுக்கும் இடையிலான தூரம் போல குற்றவாளிககும் ,  படிப்புக்கும் இடையிலான தூரம் இருக்கிறது. அவர் குடிபோதையில் குண்டு வீசியதாக கூறும் காவல்துறை ஏற்கனவே ஒருமுறை டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி  அவர்  குண்டு வீசியுள்ளதாக கூறுவது நகைச்சுவையானது , கட்டுக்கதை என்றார். 

நீட் தொடர்பான கருத்துமோதல் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டதோ என்று இந்த சம்பவங்கள் மூலம்  தோன்றுகின்றது. நேற்று மாலை முதல் தமிழகத்தில் பாஜகவிற்கு எதிராக நடைபெறும் சம்பவங்களை அகில இந்திய தலைமை கவனம்  செலுத்தி கவனித்து வருகிறது. காவல் அதிகாரிகள் அரசியல் தலையீடு காரணமாக முறையாக பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காவல் ஆணையர் அறிக்கையை நாங்கள் ஏற்க மாட்டோம். நீட் குறித்த முதலமைச்சர் உரைதான் அவர் குண்டுவீச காரணமாக இருக்கும் என நினைக்கிறேன். NIA மூலம் தான் குற்றவாளியின் பின்னணி  குறித்த முழுமையாக விசாரித்து மர்ம முடிச்சை அவிழ்க முடியும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார். 

click me!