AIADMK: அதிமுகவில் இருந்து முக்கிய பெண் நிர்வாகி நீக்கம்.. சாட்டையை சுழற்றும் ஓபிஎஸ், இபிஎஸ்..!

By vinoth kumarFirst Published Feb 10, 2022, 12:26 PM IST
Highlights

அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்ட காரணத்தினால் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்ட காரணத்தினால் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில், செயல்பட்ட காரணத்தினாலும் 

J.கனகலட்சுமி (செங்கல்பட்டு மேற்கு மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர்)

இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுகவைச் சேர்ந்த 10 பேரை கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

click me!