பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் திமுகவுக்கு பங்கு.. எதுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம்.. கராத்தே தியாகராஜன்.!

Published : Feb 10, 2022, 11:52 AM IST
பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் திமுகவுக்கு பங்கு.. எதுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம்.. கராத்தே தியாகராஜன்.!

சுருக்கம்

 பாஜக அலுவலகம் மீது நேற்று நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற சம்பவம் திமுகவின் பங்குடன் நடந்தது. பெட்ரோல் குண்டு சம்பவம் தொடர்பாக தமிழக அரசின் செயலை கண்டிக்கிறோம். 

பாஜக அலுவலகத்தில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனை மத்திய அரசு வேடிக்கை பார்க்காது என காரத்தே தியாகராஜன் கூறியுள்ளார். 

சென்னையில் தியாகராயநகர் பகுதியில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நள்ளிரவு 1 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நந்தனத்தை சேர்ந்த ரவுடி கர்த்தா வினோத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  தீவிரமாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வுக்கு பாஜக தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறுகின்றனர். இந்த சம்பவத்திற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காரத்தே தியாகராஜன்;- பாஜக அலுவலகம் மீது நேற்று நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற சம்பவம் திமுகவின் பங்குடன் நடந்தது. பெட்ரோல் குண்டு சம்பவம் தொடர்பாக தமிழக அரசின் செயலை கண்டிக்கிறோம். 

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் பணியை கெடுக்க இப்படி செய்துள்ளனர்.  இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். தாக்குதலுக்கு தமிழக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். தொடர்ச்சியாக பாஜக அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனை மத்திய அரசு வேடிக்கை பார்க்காது என ஆவேசமாக தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!