அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி திடீர் ஆய்வு..! சிக்கலில் ஓபிஎஸ்... காரணம் என்ன..?

By Ajmal Khan  |  First Published Sep 7, 2022, 9:57 AM IST

அதிமுக அலுவலகத்தை சூறையாடிய வழக்கில் சிபிசிஐடி போலீசார் ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் திடீர் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் போது சேதமான பொருட்களின் விவரங்களை அதிமுக அலுவலக நிர்வாகிகளிடம் கேட்டறிந்தனர்.


அதிமுக அலுவலக மோதல் வழக்கு

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மோதிக்கொண்டுள்ளனர். கடந்த ஜூலை 11 ஆம் தேதி ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அப்போது இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் வழி மறித்ததால் மோதல் ஏற்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டது. இதனையடுத்து அதிமுக அலுவலகத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்தார். இதனையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் தாக்கல் செய்திருந்த மனுவில், ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்குள் புகுந்த ஓ.பன்னீர்செல்வம்  மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக அளித்த புகாரில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவும் செய்யப்பட்டதாக குறிபிட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

எம்.ஏல்.ஏக்களுக்கு ஸ்டாலின் கடிதம்.! ஆட்சியரிடம் மனு கொடுத்த எஸ்.பி வேலுமணி.! முதல் 10 கோரிக்கை என்ன தெரியுமா?

சிபிசிஐடி போலீசார் விசாரணை

அதிமுக அலுவலக சீலை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, அலுவலகத்தை திறந்து பார்த்த போது சொத்து பத்திரங்கள், கம்ப்யூட்டர்கள், 37 வாகன ஆவணங்கள் உள்ளிட்டவற்றை காணவில்லை என தெரியவந்ததாக கூறினார். இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராஜம் புகார் அளித்ததாகவும் தெரிவித்தார். அப்போது அதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.  இதனையடுத்து  ராயப்பேட்டை போலீசார், பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது, திருட்டு உட்பட, ஏழு பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.  அதிமுக அலுவலக வழக்கின் விசாரணை அதிகாரியாக, டி.எஸ்.பி., வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும்  இன்ஸ்பெக்டர்கள் லதா, ரம்யா, ரேணுகா உள்ளிட்டோரும் கூடுதலாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த குழுவின் இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சிபிசிஐடி போலீசார் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர். 

ஓபிஎஸ்க்கு சம்மன்

அதிமுக அலுவலகத்தில் திருட போன பொருட்கள் தொடர்பாகவும், சேதமடைந்த பொருட்களின் விவரங்களை அதிமுக அலுவலக நிர்வாகிகளிடம் சிபிசிஐடி அதிகாரிகள் கேட்டறிந்தனர். மேலும் அதிமுக அலுவலக மோதல் வழக்கு தொடர்பாக விசாரணை தொடங்கிய சிபிசிஐடி போலீசார் ஓ.பன்னீர் செல்வத்திற்கு நேரில் ஆஜராக சம்மன் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
 

இதையும் படியுங்கள்

அதிமுக அலுவலக கொள்ளை வழக்கு...! ஓபிஎஸ் நேரில் ஆஜராக சிபிசிஐடி உத்தரவா..?

 

click me!