தந்தை எஸ்.ஏ சந்திரசேகர், தாய் ஷோபாவுக்கு எதிராக நடிகர் விஜய் தொடுத்த வழக்கு இன்று விசாரணை..

By Ezhilarasan BabuFirst Published Sep 27, 2021, 9:16 AM IST
Highlights

இதற்கிடையில் விஜய் ரசிகர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்த அவரது தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர், அந்தக் கட்சிக்கு தனது உறவினரான பத்மநாபன்  என்பவரை தலைவராகவும், பொதுச் செயலாளராக எஸ்.ஏ சந்திரசேகர், பொருளாளராக நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. 

தனது பெயரை பயன்படுத்தி தனது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர்,  தாய் ஷோபா மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது. பல்வேறு திரைப்படங்கள் மூலம் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் விஜய், அவரின் சினிமா பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர்  அவரின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் திரை கலைஞராக இருந்து வருகிறார் நடிகர் விஜய். இந்நிலையில் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

இதற்கிடையில் விஜய் ரசிகர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்த அவரது தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர், அந்தக் கட்சிக்கு தனது உறவினரான பத்மநாபன்  என்பவரை தலைவராகவும், பொதுச் செயலாளராக எஸ்.ஏ சந்திரசேகர், பொருளாளராக நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. இதை சற்றும் எதிர்பாராத நடிகர் விஜய் தனது பெயரை பயன்படுத்தி இதுபோன்று கூட்டங்களை நடத்தவும், அல்லது அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடவும், தந்தை சந்திரசேகர், தாயார் ஷோபா மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடைவிதிக்க கோரி கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.ஜோசப் விஜய் என்ற பெயரில் தொடரப்பட்ட இந்த வழக்கில் சங்கங்களின் பதிவாளர், தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் எஸ்.ஜே ஜெகன், முன்னாள் மக்கள் தொடர்பாளர் பி.டி செல்வகுமார், விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் கே.பாரதிதாசன் உள்ளிட்ட பலரும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர்.

கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி இந்த வழக்கு தொடரப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களில் 6 பேருக்கு நோட்டீஸ் போய் சேரவில்லை என தெரிவிக்கப்பட்டது. அப்போது எஸ்.ஏ சந்திரசேகர், ஷோபா, முத்து ஆகியோர் தரப்பில் பதில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வழக்கு தொடர்ந்த விஜய் தரப்பில் வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகாததால், அந்த பதில் மனுக்களை அவர்களிடமே திருப்பி அளித்த நீதிபதி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 27ம் தேதிக்கு தள்ளிவைத்ததுடன், அன்றைய தினமே பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உரிமையியல்  நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
 

click me!