ஜனாதிபதி உரையுடன் நாளை தொடங்குகிறது பட்ஜெட் கூட்டத் தொடர்.. சவால் மிகுந்த பட்ஜெட்டாக இருக்கும் என தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Jan 28, 2021, 2:02 PM IST
Highlights

2021 மட்டும் 2022 ஆம் நிதி ஆண்டுக்கான   பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் செஷனில் முதல் பகுதி ஜனவரி 29-ஆம்  தேதி தொடங்க உள்ள நிலையில் அது பிப்ரவரி 12ஆம் தேதி நிறைவுறுகிறது. 

2021 மட்டும் 2022 ஆம் நிதி ஆண்டுக்கான   பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் செஷனின் முதல் பகுதி ஜனவரி 29-ஆம்  தேதி தொடங்க உள்ள நிலையில் அது பிப்ரவரி 12ஆம் தேதி நிறைவுறுகிறது. ஜனவரி 29 முதல் பிப்ரவரி 15 வரையில் முதல் பகுதியும்,  மார்ச் 8 முதல் ஏப்ரல் 8 வரை இரண்டாவது பகுதியாகவும் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜனவரி 29 ஆம் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் - (மாநிலங்களவை மற்றும் மக்களவை) உரையாற்றுவார். 

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு பட்ஜெட், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நாட்டில் கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து இந்திய பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அதை சரி கட்டுவதற்கான பட்ஜெட்டாக இது அமைய  வேண்டிய அவசியம் உள்ளது. கொரோனா தொற்று எதிரொலியாக வேலையில்லா திண்டாட்டம், நாட்டின் முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் மீதான விலை உயர்வால் மக்கள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர். 

இப்படி பிரச்சனை மேல் பிரச்சனைகளை மக்கள்  எதிர்கொண்டு வரும் நிலையில் இந்த பட்ஜெட் மீது பொதுமக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த முறை தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் இதுவரை கண்டிராத அளவில் இருக்கும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக இந்த பட்ஜெட் டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்பட உள்ளது கவனத்திற்குரியது. 
 

click me!