தன்னை பெற்றோர் டியூசன் அனுப்புவதாக சிறுவன் போலீசில் புகார்.!!

By Thiraviaraj RMFirst Published May 2, 2020, 10:42 PM IST
Highlights

பள்ளி மாணவனை பெற்றோர் டியூசன் அனுப்புவதாக போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

T.Balamurukan
நாட்டையை உலுக்கிக்கொண்டிருக்கிறது கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ்.உலகமே, ஊரடங்கை பிறப்பித்து மக்களை வீட்டிற்குள் முடக்கி வைத்திருக்கிறது. பள்ளி,கல்லூரி,கல்வி நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த பள்ளிகளும் மத்திய அரசு அறிவிக்கும் வரை இயங்க கூடாது,பெற்றோர்களிடம் தனியார் பள்ளி நிர்வாகம் கட்டணம் எதுவும் வாங்க கூடாது என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில், பள்ளி மாணவனை பெற்றோர் டியூசன் அனுப்புவதாக போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் ஊரடங்கை கண்காணிப்பதற்காக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வழியாக வந்த சிறுவனை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது, பெற்றோர் தன்னை கட்டாயப்படுத்தி டியூஷனுக்கு அனுப்புவதாக சிறுவன் கூற.., உடனே போலீசார் சிறுவனை அழைத்துக் கொண்டு டியூஷன் டீச்சர் வீட்டிற்கு சென்று ஊரடங்கை மீறி டியூஷன் எடுக்கக் கூடாது என்று எச்சரித்தனர். அப்போது குறுக்கிட்ட சிறுவன், தன்னை போல மூன்று சிறுவர்கள் டியூஷனுக்கு வருவதாகவும் புகார் தெரிவித்தான்.இதைத்தொடர்ந்து சிறுவனின் பெற்றோரை அழைத்து பிள்ளைகளை டியூஷனுக்கு அனுப்ப வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தினர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

click me!