தப்லீக் ஜமாத் தலைவருக்கு குற்றப்பிரிவு போலீஸ் 5வது நோட்டீஸ்..! வெளிநாடுகளில் இருந்து பணம் வந்திருப்பது அம்பலம்

By Thiraviaraj RMFirst Published May 2, 2020, 10:03 PM IST
Highlights

வளைகுடா நாடுகளுடன் தொடர்புடைய பல வங்கிக் கணக்குகளுக்கு இடையே 1கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்ததாக குற்றப்பிரிவு போலீசார், அமலாக்க இயக்குநரகத்திற்கு அறிவித்தனர்.

 T.Balamurukan

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத்தில் பல்வேறு வெளிநாட்டினர் ஒன்று கூடி மதக்கூட்டம் நடத்தினர். கொரோனா கோர தாண்டவம் ஆடிய நிலையில் அவர்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் ஒன்றாகக் கூடியிருந்தனர். இதையடுத்து, அவர்களை போலீஸார், சுகாதாரத்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தி மருத்துவப் பரிசோதனை நடத்தினர். இதில் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதும், பலருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததும் தெரியவந்தது.

டெல்லியில் இவர்கள் நடத்திய மதக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களால் தான் அதிக அளவில் கொரொனா தொற்று ஆரம்ப கட்டத்தில் பரவியது.இதை தொடர்ந்து  தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் கந்தால்வி மீது அரசாங்க உத்தரவுகளை மீறியதாக தொற்று நோய்கள் சட்டம் மற்றும் ஐபிசி ஆகிய பிரிவுகளின் கீழ்போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத்தை டெல்லி போலீஸ், குற்றப்பிரிவு போலீசார் 4 முறை அழைத்து விசாரணை நடத்தினர். ஆனால் அவரது பதில் திருப்தி இல்லாததால் அவருக்கு 5-வது முறையாக நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்தனர்.நான்காவது விசாரணையில் புலனாய்வு நிறுவனம் "மார்க்கஸின்" வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட வீடியோக்கள் குறித்த விசாரணை நடத்தியது.குற்றப்பிரிவின் அறிவிப்புக்கு எதிராக மதத் தலைவர் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கு தொடர்பாக மவுலானாசாத் மூன்று மகன்களையும், குற்றப்பிரிவு போலீசார் விசாரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.தப்லீக் ஜமாத் மற்றும் வளைகுடா நாடுகளுடன் தொடர்புடைய பல வங்கிக் கணக்குகளுக்கு இடையே 1கோடி ரூபாய் பரிவர்த்தனை நடந்ததாக குற்றப்பிரிவு போலீசார், அமலாக்க இயக்குநரகத்திற்கு அறிவித்தனர்.பணப்பரிவர்த்தனைகளில் ஈடுபட்டவர்கள் நிஜாமுதீன் மார்க்கஸ்வுடன் தொடர்புடையவர்கள் பட்டியலை தயாரித்திருக்கிறது.

click me!