எடப்பாடியாருக்காக அதிரடியாக களமிறங்கும் மகன் மிதுன்... பி.கே., வியூகத்தை தவிடு பொடியாக்க பலே திட்டம்..!

By Thiraviaraj RMFirst Published May 2, 2020, 7:45 PM IST
Highlights

தந்தைக்கு உதவுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனும் அதி தீவிரமாக களத்தில் இறங்கி கலக்கி வருகிறார். அதிமுகவின் மிக முக்கியமான சூத்திரதாரியாக உருவெடுத்து வருகிறார் மிதுன். 
 

தந்தைக்கு உதவுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனும் அதி தீவிரமாக களத்தில் இறங்கி கலக்கி வருகிறார். அதிமுகவின் மிக முக்கியமான சூத்திரதாரியாக உருவெடுத்து வருகிறார் மிதுன்.

 

கொரோனா நிவாரண பணிகளை மேற்கொள்வதில் அதிமுக -திமுக ஆகிய இரு கட்சிகளை சேர்ந்த சமூகவலைதள குழுக்கள் உச்சகட்ட போட்டி நிலவி வருகிறது. ஒன்றிணைவோம் வா என்கிற இயக்கத்தை ஆரம்பித்து திமுக அசுர பலத்துடன் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன. இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா ஆளும் தரப்பான அதிமுக..? முதல்வர் எடப்பாடி மகன், மிதுன் தலைமையில் அமைந்துள்ள சமூக ஊடக குழுவை தமிழக அரசு துறைகளுடன் இணைந்து செயல்படுத்தி மும்மரமாகி விட்டது. 

திமுகவுக்கு பிரசாந்த் கிஷோரை அதிமுகவுக்காக டெல்லியைச் சேர்ந்த தேர்தல் வியூக நிபுணர் பிரதீப் பண்டாரியுடன் கைகோர்த்துள்ளார் மிதுன். அவரது வழைகாட்டுதலின்படி,  தமிழகம் முழுவதும் எடப்பாடியாரின் நிர்வாகத் திறன், ஆட்சி, சாதனை, மக்களின் கருத்து பற்றி தீவிரமாக சர்வே எடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

எடப்பாடியாரின் சமூகவலைதளப்பக்கங்கள் பரபரப்பாக இயங்கி வருவதற்கும், அதன் மூலம் உடனடியாக உதவிகள் கிடைப்பதற்கும் காரணம் மிதுன் தலைமையில் செயல்பட்டு வரும் சமூகவலைதல குழுவே காரணம் என்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து செயல்பட்ட அனுபவம் கொண்டவரான பிரதீப் பண்டாரியை டெல்லியில் இருந்து அழைத்து வந்திருக்கிறார் மிதுன். பிரபல ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு சர்வேக்களை மிகத்துல்லியமாக எடுத்து அப்ளாஸ்களை அள்ளிய அனுபவம் கொண்டவராம் இந்த பிரதீப் பண்டாரி. 

பிரதீப் பண்டாரி பிரஷாந்த் கிஷோர் டீமில் முன்பு பணியாற்றியவர் என்றாலும் தயங்காமல் டெல்லிக்கு போய் தந்தைக்காக சில மாதங்களுக்கு முன்பே சென்று பேச்சுவார்த்தையை முடித்து வந்து விட்டார் மிதுன். அதன்பிறகு சென்னை வந்த பிரதீப் பண்டாரி சில கட்ட பேச்சுவார்த்தைகளை முடித்து விட்டு திட்டங்களையும் வகுத்துக் கொடுத்து விட்டு சென்றுள்ளார். அதன்படி சத்தமே இல்லாமல் கார்யம் நிகழ்த்தி வருகிறது மிதுன் டீம். 

மிதுன் தலைமையிலான அந்த டீம், அதிமுக கட்சி மற்றும் எடப்பாடி தலைமையிலான அரசு  ஆகிய இரண்டு விஷயங்களில் மக்களின் எண்ண ஓட்டங்களை கணிக்கும் பணியில் இறங்கியது. அந்த ரிப்போர்ட் தற்போது மிதுனின் கைகளில் இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, சமூக ஊடக நிபுணர்கள், சமூக வலைதள வல்லுனர்கள் உள்பட பல்வேறு துறைகளை சார்ந்த அரசியல் விமர்சகர்கள் அடங்கிய ஒரு டீமை தனது தலைமையில் உருவாக்கியிருக்கிறார் மிதுன். 

இதற்கிடையே, முன்பு திமுகவுக்காக பணியாற்றிய சுனிலை, அதிமுகவுக்காக பணியாற்ற எடப்பாடி தரப்பு அணுகியிருக்கிறது. திமுக தரப்பிடம் இருந்து விலகிய சுனில், கர்நாடகா துணை முதல்வர் அஸ்வத் நாராயணனுக்கு ஆலோசகராக சென்றார். ஆனாலும், அவர் அங்கிருந்து விலகி மீண்டும் அதிமுக தரப்பை நாடியுள்ளார். அவருக்கு பாஜகவை சேர்ந்த ஒருவர் சிபாரிசு செய்வதால் சுனிலை பயன்படுத்த அதிமுக தரப்பு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. 

தேசிய அளவில் அனுபவம் வாய்ந்த பிரதீப் பண்டாரியில் செயல்பாடுகள் சிறப்பாக உள்ள நிலையில் சுனில் எதற்கு? என்கிற முணுமுணுப்புகள் அதிமுக வட்டாரத்தில் கேட்கின்றன. அதையும் தாண்டி சுனில் தரப்பு அதிமுக தரப்பு ஆலோசகராக இடம் பெறாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள். ஆனால், முடிவு எடப்பாடியாரின் கையில் அல்ல... அவரது மகன் மிதுன் எடுக்கும் முடிவாகத்தான் இருக்கும் என்கிறார்கள். 

இனி முடிவுகள் அனைத்தும் மிதுனின் கைகளில் மட்டுமே..! 
 

click me!