பாஜக யாருக்கும் தீங்கு விளைவிக்காது.. மோடி அரசை தூக்கி பிடிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்..!

By vinoth kumarFirst Published Jul 28, 2021, 10:50 AM IST
Highlights

வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினரின் வியூகத்தை முறியடிக்கும் வகையில், அந்தந்த பகுதியில் அதிமுக நிர்வாகிகள் ஒற்றுமையாகச் செயல்பட்டு வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினரின் வியூகத்தை முறியடிக்கும் வகையில், அந்தந்த பகுதியில் அதிமுக நிர்வாகிகள் ஒற்றுமையாகச் செயல்பட்டு வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் எம்எல்ஏவும், ஒன்றியச் செயலாளருமான கோவி.சம்பத்குமாா் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில்;- சட்டப் பேரவைத் தேர்தலின்போது, பொய் வாக்குறுதிகளை அளித்து பொய் பிரசாரங்களைப் பரப்பி திமுகவினா் வெற்றி பெற்றுவிட்டனர். 

வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினரின் வியூகத்தை முறியடிக்கும் வகையில், அந்தந்த பகுதியில் அதிமுக நிர்வாகிகள் ஒற்றுமையாகச் செயல்பட்டு வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், ஒன்றியங்கள், பேரூராட்சிகள், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளில் அதிமுக வெற்றி பெற ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

மேலும், பேசிய அவர் வடமாநிலங்களில் பாஜக யாருக்கும் எந்த வித தீங்கும் விளைவிக்காமல் அனைவருக்கும் உறுதுணையாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் திமுகவை சேர்ந்தவர்கள் பாஜகவுக்கு எதிரானவர்கள் முஸ்லிம்கள் என்று பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என கே.சி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.

click me!