#திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா ... தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்..!

Published : Jul 28, 2021, 10:29 AM IST
#திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா ... தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்..!

சுருக்கம்

505 வாக்குறுதிகளை செயல்படுத்தாததையும், தொடர்ந்து ஏற்படும் மின்சார தடையை நீக்க வலியுறுத்தியும் இந்த ஆர்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. 

திமுக தேர்தல் அறிக்கையில் கூறிஒய வாக்குறுதிகளை செய்து தரவில்லை என அதிமுகவினர் தமிழாம் முழுவதும் உரிமைக்குரல் முழக்கப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 

நீட் தேர்வு ரத்து, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைப்பு, குடும்பத்தலைவிக்கு மாதந்தோறும் 1000. கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியத்தொகை வழங்குவது, கல்விக்கடன், நகைக்கடன் தள்ளுபடி, முத்யோர் உதவித்தொகையை ரூ1.500 ஆக உயர்த்துவது மற்றும் 505 வாக்குறுதிகளை செயல்படுத்தாததையும், தொடர்ந்து ஏற்படும் மின்சார தடையை நீக்க வலியுறுத்தியும் இந்த ஆர்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. 

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி  ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார். திமுக அரசை கண்டித்து தேனி மாவட்டம் போடியில் தனது இல்லம் முன்பாக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

 

#திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா என்கிற ஹேஷ்டேக்கை ட்விட்டர் சமூக வலைதளத்தில் உருவாக்கி ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!