குழந்தை பாக்கியம் இல்லாமல் எவ்வளவோபேர் கஷ்டபடுறாங்க. ஆனால் இவங்கள பாருங்க. 4 வது மாடியிலிருந்து விழுந்த சோகம்.

By Ezhilarasan BabuFirst Published Jul 28, 2021, 9:41 AM IST
Highlights

அந்த வகையில் சென்னையில் வசிக்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒரு தாய் தன் குழந்தையை கவனக்குறைவாக கையாண்டதால் அந்த குழந்தை மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சாஸ்திரி நகரில் ஒரிசாவை சேர்ந்த சமையல் தொழிலாளியின் 15 மாத ஆண் குழந்தை நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பகுதியே சோகத்தில் மூழுகியுள்ளது. 

குழந்தைச்செல்வம் என்பது இறைவன் கொடுத்த வரம்.. அது அரிதிலும் அரிதான செல்வம், எத்தனையோ தம்பதிகள் குழந்தை பாக்கியம் வேண்டி தவமாய்  தவம் கிடக்கின்றனர் ஆனால் குழந்தைச்செல்வம் உள்ளவர்களோ அந்த குழந்தைகளின் முக்கியத்துவம், அதன் அருமை பெருமைகள் தெரிவதில்லை. குழந்தைகளை  கவனக்குறைவாக கையாளுவது, உதாசினப்படுத்துவது போன்ற சம்பவங்கள் சமீக காலமாக அதிகரித்துள்ளது. பொத்திப் பொத்தி பாதுகாக்க வேண்டிய குழந்தைகளை  அசால்டாக கையாளுவதன் மூலம், எதிர்பாராத அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடுகிறது. அது அந்தப் பெற்றோரை மட்டுமல்லாது, பலரையும் மீளமுடியாத சோகத்தில் ஆழ்த்தும் சம்பவமாகவும்அமைந்துவிடுகிறது. 

அந்த வகையில் சென்னையில் வசிக்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒரு தாய் தன் குழந்தையை கவனக்குறைவாக கையாண்டதால் அந்த குழந்தை மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அது கேட்கும் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஒரிசாவைச் சேர்ந்தவர் கமல காந்த் பரிக் என்பவர், சென்னை சாஸ்திரி நகர் 11வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில்  4 வது மாடியில் கணபதி என்பவருடைய வீட்டில் சமையல்காரராக பணியாற்றிவருகிறார். இவருக்கு அதே வீட்டிலேயே ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் தனது மனைவி பதினைந்து மாத ஆண் ( ஹிமாசு பரிக்) குழந்தையுடன் வசித்து வந்தார். 

இந்த நிலையில் கமல காந்த் பாரிக்கின் மனைவி,  தாங்கள் வசிக்கும் அறையை ஒட்டியுள்ள சிமெண்ட் சிலாப்ப் மீது குழந்தையை உட்கார வைத்து சாப்பாடு ஊட்டி கொண்டிருந்தார். அப்போது குழந்தை திடீரென தவறி கீழே விழுந்தது. அதை கண்ட தாய் பதறிய அடித்து அலறினார். ஆனால் குழந்து தரையில் விழுந்து மோதியது. தாயின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்ததில் குழந்தை ரத்த வெள்ளத்தில் கிடந்தது பதறியடித்துக் கொண்டு ஆபத்தான நிலையில் குழந்தையை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது. இது தொடர்பாக சாஸ்திரிநகர் போலீசார் தாய் மற்றும் தந்தையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

click me!